பெண்கள் எப்போதும் தங்களது முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். முகத்தைப் பராமரிக்க விதவிதமான அழகு சாதனப் பொருள்களையெல்லாம் வாங்கி வீட்டிலேயே தங்களை அழகாக்கிக் கொள்ள முயற்சி செய்வார்கள். ஆனாலும் ஒரு சிலர் அழகு நிலையங்களுக்கெல்லாம் சென்று தங்களது முகத்தை அழகாக்கிக் கொள்வார்கள். சில நேரங்களில் தேவையில்லாத செலவுகள் என சரும பராமரிப்பை முற்றிலும் நிறுத்திவிடுவார்கள். இது போன்ற நிலையில் உள்ளவர்களாக நீங்கள்? அப்படின்னா இயற்கையாகவே உங்களது முகத்தைப் பராமரிக்க என்ன உபயோகிக்கலாம்? எப்படி உபயோகிக்கலாம்? என்பது குறித்து விபரங்களை இங்கே நாமும் அறிந்துக் கொள்வோம்.
முகத்தில் பருக்கள் இல்லை. எண்ணெய் பிசுபிசுப்பும் இல்லை. ஆனாலும் பல பெண்களுக்கு முகம் களையிழந்து காணப்படும். இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதாக இருந்தால், முகத்திற்கு பல முறை சோப்பு போட்டு கழுவுவார்கள். இருந்தப் போதும் முகம் பளபளப்பை தராது. இந்நேரத்தில் நீங்கள் உடனடியாக முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்று நினைத்தால் பாதாம் பேஸ் பேக் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
மேலும் படிங்க: பெண்களுக்கான டிரெண்டிங் சேலைகளின் லிஸ்ட்!
பாதாம் பேஸ் பேக் செய்முறை:
- இயற்கையான முறையில் பாதாம் பேஸ் பேக் செய்ய வேண்டும் என்றால், முந்தைய நாள் இரவில் ஒரு 10 பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பின்னர் ஊற வைத்த பாதாம் தோலை உரித்துக் கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- இதையடுத்து பாதாம் மற்றும் பால் கலவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக் கொண்டால் போதும் இயற்கையான பாதாம் பேஸ் பேக் ரெடி.
பயன்படுத்தும் முறை:
மேற்கூறியுள்ள முறையில் வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய பாதாம் பேஸ் பேக்கை முகம், கழுத்து, கை பகுதிகளில் தேய்த்துக் கொள்ளவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு பேஸ் பேக் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவினால் போதும். முகம் பிரகாசமாக இருக்கும். திருமணம் போன்ற விசேச நிகழ்ச்சிகளுக்குத் தான் இந்த பேஸ் பேக் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. வாரத்திற்கு ஒருமுறையாவது பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்களது முகத்தை பளபளப்புடனும், இளமையான தோற்றத்தை பெற முடியும்.
ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் சருமமாக இருந்தால், நீங்கள் பாதாம் கலவையுடன் மஞ்சள் பொடி, ரோஸ் வாட்டார், எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தேய்க்கவும். இது சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதோடு, இறந்த செல்களை நீக்கவும் உதவியாக உள்ளது. முகத்தில் உள்ள பருக்களை நீக்கி சருமத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிங்க: பாதங்களை அழகாக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்துக் கோங்க!
மேலும் பாதாமில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பண்புகள் உள்ளதால் விரைவில் வயதானத் தோற்றம் அடைவதையும் தடுக்க முடியும். இனி உங்களது சருமத்தை இயற்கையான முறையில் பராமரிக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் பாதாம் பேஸ் டிரை பண்ணிப்பாருங்கள்.
Image source - Google