சேலை கட்டும் பெண்களுக்கு தனி அழகு. எத்தனையோ மாடர்ன் உடைகள் வந்திருந்தால் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சேலை அணிந்து செல்லக்கூடிய பழக்கம் பெண்களிடம் குறையவில்லை. காலத்திற்கு ஏற்ப விதவிதமான சேலைகளை வாங்கி அணிவதில் பெண்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இவர்களுக்காகவே சந்தைகளில் புதிய டிசைன்களோடு புடவைகள் விற்பனையாகிறது. நவநாகரீக் புடவைகள் பெண்களின் நாகரித்தை மேம்படுத்துவதோடு, எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அவர்களைத் தனித்துவமாக காட்டுகிறது.
பெண்கள் தங்களது அலமாரிகளில் லேட்டஸ்ட் மாடல்களில் வரக்கூடிய புடவைகளை வாங்கி அடுக்கிவைக்கிறார்கள். அலுவலகம் செல்வது, பிறந்த விழாக்களுக்கு செல்வது, திருமணத்திற்கு செல்வது, நண்பர்களுடன் வெளியில் செல்வதற்கென விதவிதமான சேலைகளை வாங்கி அடுக்கி வைக்கும் பழக்கம் பெண்களிடம் கொஞ்சம் கூட குறையவில்லை. இதோடு இன்னும் புதிய மாடல்களில் புடவைகளை வாங்கி அடுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? லேட்டஸ்ட் டிரெண்டடிங் புடவைகள் என்னென்ன என இங்கே தெரிந்துக் கொண்டு இப்ப ஆரம்பிச்சிடுங்கள். இதோ இந்தாண்டிற்கான டிரெண்டிங் புடவைகளின் லிஸ்ட் இங்கே.
மேலும் படிங்க: பாதங்களை அழகாக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்துக் கோங்க!
டிரெண்டிங் புடவைகள்:
- டயமண்ட் ஒர்க் புடவை: புடவைகளில் கவர்ச்சியான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை நீங்கள் பெற வேண்டும் என்றால், டயமண்ட் ஒர்க் புடவை உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். சேலைகள் முழுவதும் நுட்பமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வேலைப்பாடுகளும் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இளஞ்சிவப்பு நிறத்தோடு கோல்டன் கலரில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள் சேலை பிரியர்களுக்கிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
- எம்பிராய்டரி வேலை சேலை: பெண்கள் மற்றவர்களைப் போன்றில்லாமல் முற்றிலும் தனித்துவமான தோற்றத்தைப் பெற வேண்டும் என்பதற்கான சேலைகள் எம்பிராய்ட்ரி ஒர்க் அதிகளவில் உள்ளது. நீலம், இளஞ்சிவப்பு என பல்வேறு கலர்களில எம்பிராய்ட்ரி சேலைகள் உள்ளது. இந்த சேலைக்கு பெங்களூர் சில்க் துணியால் செய்யப்பட்ட இந்த பிளவுஸ் மிகவும் ஸ்டைலான தோற்றத்தை அளிக்கிறது. கடைகளில் ரூ2, 219 க்கு சேலைகள் விற்பனைக்கு உள்ளது.
- பனாரசி புடவைகள்:பெண்களின் அழகைத் தனித்துவமாக காட்டுவதில் பனராசி புடவைகளும் தனி பங்கு உண்டு. இந்தாணடும் டிரெண்டிங் சேலைகளின் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி சரிகைகளுடன் தனித்துவமான அழகைக் கொடுக்கிறது.
- டிஷ்யூ சேலைகள்: கனமான பட்டுப்புடவைகளை அணிய விரும்பம் இல்லாத பெண்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இன்றைய டிரெண்டிங்கிற்கு ஏற்ற டிஷ்யூ சேலைகள் உங்களுக்காகவே உள்ளது. நுட்பமான தொழில்நுட்பத்துடன் பளபளப்புடன் காணப்படும் இந்த புடவைகள் பெண்களின் அழகை மெருக்கூட்டும். லைட் வெயிட்டில் வருவதால் சேலை என்பதால் புடவை கட்டத் தெரியாத பெண்கள் உள்பட இளம் வயது பெண்களும் விரும்பி வாங்கும் அளவிற்கு உள்ளது.
- காதி சேலைகள்: இளம் வயது பெண்களிடமும் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது காதி சேலைகள். பழங்கால டிசைன்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ப நேர்த்தியாக வடிவமைக்கப்படுகிறது.
இதோடு மல்டி கலர் சேலைகளில் பட்டு முதல் ஷிஃபான் சேலைகள் வரை அனைத்துமே பெண்களின் டிரெண்டிங் லிஸ்டில் உள்ளது. மேலும் ஜரி வேலைப்பாடுகளுடன் கூடிய பிரகாசமான சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளும் பெண்களின் டிரெண்டிங்கில் லிஸ்டில் உள்ளது.
Image Credit - Google