மாணவர்கள் பொதுத்தேர்வு பயத்தை சமாளிப்பதற்கான வழிகள்


Alagar Raj AP
20 Feb 2024
www.herzindagi.com

    மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பயம் மற்றும் கவலையை சமாளிப்பது எளிதான காரியம் அல்ல, ஆனால் சரியான வழிகள் மூலம் பொதுத்தேர்வு பயத்தை எதிர்கொள்ள முடியும்.

நேரத்தை நிர்வகித்தல்

    பொதுத்தேர்வுக்கு கடைசி நேரத்தில் தயாராகாமல் முன்கூட்டியே தயாராகத் தொடங்குங்கள். படிப்பதற்கான நேரத்தையும், மற்ற செயல்பாட்டிற்கும் நேரத்தை நிர்வகித்து கொள்ளுங்கள்.

சுய பொதுத்தேர்வு

    கடந்த ஆண்டு பொதுத்தேர்வு கேள்விகளை வைத்து நீங்களாகவே மாதிரி தேர்வு எளிது பாருங்கள். அதன் மூலம் உங்களின் நேர மேலாண்மை மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முறைகளை புரிந்து கொள்ள முடியும்.

ஒப்பிடக் கூடாது

    பல மாணவர்கள் தங்களை மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இது தேவையற்ற மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதால் மற்ற மாணவர்களுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஊட்டத்துடன் இருப்பது முக்கியம்

    மூளையின் செயல்பாடு மற்றும் ஆற்றலை அதிகரிக்க சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெயில் காலம் என்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

நிறைய தூக்கம் அவசியம்

    பொதுத்தேர்வு நேரத்தில் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்க வேண்டும். தூங்கும் முன் காஃபின் எடுத்து கொளவ்து மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

தியானம் மேற்கொள்வது

    தியானம், சுவாசப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் பொதுத்தேர்வு நேரங்களில் மனதை சாந்தமாக வைத்திருக்க முடியும்.