தாய்ப்பாலில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் தாய்மார்கள் இந்த சில தவறுகளை செய்யக்கூடாது.
காஃபின்
பாலூட்டும் காலகட்டத்தில் தாய்மார்கள் காஃபின் உட்கொள்ளல் அளவை குறைக்க வேண்டும்.
ஜங்க் ஃபுட்
அவர்கள் அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட ஜங்க் ஃபுட்களை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட கூடாது.
குறிப்பிட்ட மீன்கள்
பாதரசம் அதிகம் உள்ள மீன்கள் சாப்பிடுவதை பாலூட்டும் தாய்மார்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
காற்று அடைக்கப்பட்ட பானங்கள்
கூல் ட்ரிங்க்ஸ், சோடாக்கள் போன்ற காற்று அடைக்கப்பட்ட பானங்களை குடிப்பதை தவிர்க்கப்பட வேண்டும்.
மது அருந்துதல்
பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்த கூடாது. மது அருந்திய பிறகு 2 முதல் 3 மணிநேரம் வரை இரத்தத்தில் மது கலந்திருக்கும், இந்த நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் பிற்காலத்தில் தூக்கமின்மை மற்றும் அறிவாற்றல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்.
புகைபிடித்தல்
பாலூட்டும் தாய்மார்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை குழந்தையின் நலனுக்காக முற்றிலும் நிறுத்த வேண்டும்.