சுரைக்காய் பிடிக்காதா? அப்போ சுரைக்காய் அல்வா சாப்பிட்டு பாருங்க!


Alagar Raj AP
18 Feb 2024
www.herzindagi.com

தேவையான பொருட்கள்

    2 துருவிய சுரைக்காய், 1 கப் பால், 2 டேபிள் ஸ்பூன் நெய், துருவிய இஞ்சி - அரை கப் துருவிய இஞ்சி, 200 கிராம் வெல்லம், 1 ஸ்பூன் ஏலக்காய் தூள், பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் தேவையான எண்ணிக்கை.

ஸ்டேப் 1

    கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம், கிஸ்மிஸை நன்றாக வறுக்கவும்.

ஸ்டேப் 2

    அடுத்ததாக கடாயில் நெய் ஊற்றி துருவிய சுரைக்காயை போட்டு பத்து நிமிடம் வதக்கவும்.

ஸ்டேப் 3

    பத்து நிமிடம் வதங்கிய பின் துருவிய வெல்லம் சேர்த்து அது உருகும் வரை கலக்கவும். அதன் பின் பால் ஊற்றி கலக்கவும். கலவை கெட்டியாகும் வரை நன்றாக கலக்கவும்.

ஸ்டேப் 4

    அல்வா கெட்டியானதும், ஏலக்காய் பொடியை தூவி மீண்டும் கலக்கவும்.

ஸ்டேப் 5

    ஏலக்காய் பொடி கரைந்ததும் முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான் தித்திக்கும் சுவையான அதிக ஆரோக்கியமான சுரைக்காய் அல்வா தயார்.

ஆரோக்கியம்

    நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு, இதய நோய் போன்ற பாதிப்புகளை சுரைக்காய் கட்டுப்படுத்தும். மேலும் இதில் அதிகமாக இருக்கும் நீர் சத்து உடல் சூட்டை தணிக்கும்.