தினமும் இந்த ஜூஸ் குடிங்க. கண்டிப்பாக முகம் பளபளப்பாகும்!

ஊட்டச்சத்துள்ள காய்கறிகளால் செய்யப்படும் ஜுஸ்களைத் தினமும் பருகி வந்தால் போதும். நிச்சயம் உடல் ஆரோக்கியத்தோடு மட்டுமின்றி சரும பிரச்சனையின்றி வாழமுடியும் 

Jansi Malashree V
skin glowing tips

மதி போன்ற முகம் உடையாள் என்ற கூற்றிற்கு ஏற்ப பெண்கள் தங்களது முகத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக பல மெனக்கெடவும் செய்வார்கள். அழகு நிலையங்களுக்குச் செல்வது முதல் வீட்டில் உள்ள அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தி தங்களது சருமத்தை மேலும் அழகாக்கிக் கொள்ள முயற்சி செய்வார்கள். என்ன தான் இது போன்ற அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தினாலும் சில சமயங்களில் சருமத்தில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவு முறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

vegetable juice

குறிப்பாக உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதற்காக ஊட்டச்சத்துள்ள காய்கறிகளால் செய்யப்படும் ஜூஸ்களை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு சரும பராமரிப்பிற்கு பேருதவியாக இருக்கும் ஜூஸ்களின் வகைகள் மற்றும் எப்படி சரும பராமரிப்பிற்கு உபயோகமாக உள்ளது? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

முக பளபளப்பிற்கு உதவும் ஜூஸ்கள்:  

வெள்ளரி ஜூஸ்:

சருமம் நீரேற்றத்துடன் இருந்தால் மட்டுமே முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும். இதனால் அதிக நீர்ச்சத்துக்கள் நிறைந்த வெள்ளரியை உங்களது டயட்டில்  சேர்த்துக்கொள்ளலாம். தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறையாவது வெள்ளரியைப் பயன்படுத்தித் தயார் செய்யப்படும் ஜூஸை நீங்கள் பருகலாம். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுகக்கள் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் சருமத்தை புத்துயிர் பெற செய்கிறது. மேலும் சருமம் வறண்டு விடுவதைத் தடுப்பதோடு கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கிறது. 

தக்காளி ஜூஸ்:

முகத்தைப் பளபளப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக தக்காளி ஜூஸ் பருகலாம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் தோல் எரிச்சலைக் குணப்படுத்துவதோடு சருமத்தில் பருக்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

மேலும் படிக்க: பீட்ரூட்டில் கொட்டிக் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

கேரட் ஜூஸ்:

பெண்களின் சருமம் பளபளப்புடனும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், கேரட் ஜூஸ் உங்களுக்கு நல்ல தேர்வாக அமையும். இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் உங்களது மேனியை எப்போதும் இளமையுடனும், பொலிவுடனும் வைத்திருக்க உதவியாக உள்ளது.

கீரை ஜூஸ்:

சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கீரை ஜூஸை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு,பல சரும பிரச்சனைகளைத் தீர்வாக அமைகிறது. 

 skin secrets

இதோடு பீட்ரூட் ஜூஸ்,  செலரி ஜூஸ் போன்ற ஊட்டச்சத்துள்ள காய்கறிகளால் செய்யப்படும் ஜுஸ்களைத் தினமும் பருகி வந்தால் போதும். நிச்சயம் உடல் ஆரோக்கியத்தோடு மட்டுமின்றி சரும பிரச்சனையின்றி வாழமுடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: பாதங்களை அழகாக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்துக் கோங்க!

Image Source- Google

 

Disclaimer