அதிகம் கோபம் கொள்பவரா நீங்கள்? உங்கள் கோபத்தை சமாளிக்க சில வழிகள்
Alagar Raj AP
18 Feb 2024
www.herzindagi.com
அதிக கோபம் பல வகைகளில் நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும். அதனால் கோபத்திற்கு வழிவகுக்காமல் அதை எப்படி சமாளிப்பது என்று காண்போம்.
மெதுவாக சுவாசிக்கவும்
நீங்கள் கோபமாக இருக்கும் போது வழக்கத்தை விட அதிகமாக சுவாசிப்பீர்கள். ஆகையால் சுவாசத்தை இழுத்து மெதுவாக விட முயற்சித்தால் கோபம் குறையும்.
எண்ணுங்கள்
நீங்கள் கோபமாக உணரும் பொது 1 முதல் 50 வரை எண்ணுங்கள். இது உங்கள் இதயத் துடிப்பை குறைத்து குளிர்ச்சியாக வைக்க உதவும். இதனால் உங்கள் கோபம் குறையும்.
பேசாமல் இருக்கவும்
கோபமாக இருக்கும் நாம் பேசும் வார்த்தைகளால் மற்றவர்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அது அவர்கள் உங்கள் மீது வைத்துள்ள மரியாதையை கெடுத்து விடும். இதனால் கோபம் ஏற்படும் போது பேசாமல் இருப்பது உங்கள் எண்ணங்களை சேகரிக்க உங்களுக்கு நேரம் கொடுக்கும்.
நடந்து செல்லுங்கள்
நீங்கள் கோபமாக இருக்கும் போது அந்த பகுதியில் இருந்து விலகி நடந்து செல்லுங்கள்.நடப்பது, பைக் ஓடுவது போன்ற செயல்கள் உங்கள் கோபத்தை குறைக்கும்.
மன அமைதி
கோபமாக இருக்கும் தருணத்தில் அமைதியான அறைக்குள் சென்று கண்களை மூடிக்கொண்டு, நிதானமான காட்சியில் உங்களைக் காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள். கோபத்தின் மத்தியில் அமைதியைக் கண்டறிய இந்தப் பயிற்சி உங்களுக்கு உதவும்.
உடைத்தல்
நீங்கள் கோபமாக இருக்கும் போது தேவையில்லாத பொருட்கள் எதையாவது அடித்து உடைப்பதால் உங்களுக்கு மன நிறைவு கிடைக்கும்.