உணவில் சேர்க்கப்படும் மிளகாய் மற்றும் மிளகாய் தூளின் ஆரோக்கிய நன்மைகள்
Alagar Raj AP
20 Feb 2024
www.herzindagi.com
நாம் தினசரி சாப்பிடும் உணவில் காரத்திற்காக மிளகாய் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கிறோம். ஆனால் அதில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பல நன்மைகளும் இருக்கிறது.
வலி நிவாரணம்
மிளகாய் செதில்களில் உள்ள கேப்சைசின் வலி நிவாரணியாக செயல்படுகிறது. கீல்வாதம் மற்றும் நாள்பட்ட தசை வலி போன்ற பாதிப்புகளுக்கு மிளகாய் நல்ல பயனளிக்கும்.
எடை இழப்பு
மிளகாயில் இருக்கும் கேப்சைசின் பசியைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடல் இடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல பலனை தரும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
மிளகாயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள கேப்சைசினின் உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களைத் தடுக்க உதவுகின்றன.
செரிமான ஆரோக்கியம்
மிளகாய் வயிற்று அமிலத்தின் உற்பத்தியைத் தூண்டுவதால் குடல் இயக்கம் செயல்பட ஊக்குவிக்கப்படுகிறது. இது செரிமானத்தை சரியாக செயல்பட வைக்கிறது.
இருதய ஆரோக்கியம்
மிளகாயில் உள்ள கேப்சைசின் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் ஆபத்து குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நல்ல மனநிலை அதிகரிக்கும்
மிளகாயில் உள்ள கேப்சைசின் நம் உடலில் எண்டோர்பின்ஸ் எனப்படும் ரசாயன வெளியீட்டை அதிகம் தூண்டுவதால் இது உங்கள் மனநிலையை மேம்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.