முகப்பொலிவை அதிகரிக்க நடிகை தமன்னாவின் ஃபேஸ் மாஸ்க் டிப்ஸ்


Alagar Raj AP
19 Feb 2024
www.herzindagi.com

தமன்னாவின் சரும ரகசியம்

    முகத்தை எப்போதும் பப்பாளி பழம் போல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கும் நடிகை தமன்னா தனது முக பராமரிப்பு ரகசியத்தை கூறியுள்ளார்.

ஃபேஸ் மாஸ்க்

    தன் முக சருமத்தில் எந்தவிதமான கறைகளும் இல்லாமல், முகத்தை நீரேற்றமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தமன்னா ஃபேஸ் மாஸ்க் செய்வதாக தெரிவித்துள்ளார்.

வீட்டில் உள்ள பொருட்கள்

    தமன்னா தனது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

தேவையான பொருட்கள்

    தேன், ஒரு ஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் காபி.

ஃபேஸ் மாஸ்க் முறை

    தேனுடன் ஒரு ஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் சிறிது காபியை கலந்து அதை முகத்தில் 10 நிமிடம் ஸ்க்ரப் செய்து தண்ணீரில் முகத்தை கழுவுங்கள்.

வறண்ட சருமம்

    உங்களிடம் வறண்ட சருமம் இருந்தால் அதிக தேனை சேர்த்து கொள்ளலாம்.

பேட்ச் டெஸ்ட்

    இந்த பொருட்களில் உங்கள் சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படலாம். ஆகையால் முதலில் உங்கள் சருமத்தில் பேட்ச் டெஸ்ட் செய்து பாருங்கள்.