முடி உதிர்தலுக்கு குட்பை சொல்லும் இயற்கையான ஜூஸ்


Alagar Raj AP
19 Feb 2024
www.herzindagi.com

    இயற்கையான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களால் ஆனா இந்த பணத்தை குடிப்பதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனைக்கு குட்பை சொல்லலாம்.

தேவையான பொருட்கள்

    அரை துண்டு கேரட், 1 செலரி கீரை தண்டு, அரை துண்டு ஆப்பிள், அரை துண்டு வெள்ளரி, அரை எலுமிச்சை, 1 அங்குல துண்டு இஞ்சி, 8 கறிவேப்பிலை இலைகள், முருங்கை இலைகள் மற்றும் தண்ணீர்.

ஸ்டேப் 1

    கேரட், செலரி கீரை, ஆப்பிள், வெள்ளரி, இஞ்சி, கறிவேப்பிலை இலைகள், முருங்கை இலைகளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் போல் கெட்டியாக வரும் வரை அரைக்கவும்.

ஸ்டேப் 2

    அடுத்ததாக அரைத்த ஜூஸை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் எலுமிச்சை சாறை பிழிந்து கலக்கி குடிக்கலாம்.

ஆரோக்கியம்

    இதில் இருக்கும் கேரட், கறிவேப்பிலை, இஞ்சி, ஆப்பிள், கீரை, முருங்கை இலை ஆகிய பொருட்கள் தலைமுடியை வலிமையாக பராமரிக்க உதவுகிறது.

குடிக்கும் முறை

    இந்த ஜூஸை 6 மாதங்களுக்கு தினசரி காலை குடிப்பதன் மூலம் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும், முடி உதிர்வு கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

மருத்துவர் ஆலோசனை

    இதில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் பொதுவானவை. தலைமுடி பிரச்சனைக்கு மருத்துவர் ஆலோசனையை பெறுவது சிறந்தது.