Obsessive compulsive disorder: ஓசிடி நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

ஒருவருக்கு ஓசிடி நோய் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Staff Writer
reasons for ocd

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் மன அழுத்த பிரச்சனைகள் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மன அழுத்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. மன அழுத்தம், கவலை, மனசோர்வு போல ஓசிடி (obsessive compulsive disorder) என்ற ஒரு வகை மனநிலையும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஓசிடி என்பது ஒரு மனநிலை சம்பந்தப்பட்ட நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை பற்றி தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தி கொள்வது வழக்கம்.

நம்மில் பலரும் கடந்த காலத்தை நினைத்து வருந்தியும், எதிர்காலத்தை எண்ணி பயந்தும், தற்போது வாழும் நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து விடுகிறோம். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதினால் அதன் பின்விளைவாக மன உளைச்சல், மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம். மனதை ஒருநிலை படுத்தினால் நம் வாழ்வின் தோல்வியைக் கூட நம்மால் எளிதில் கையாள முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட காரணம் என்ன?

இந்த மனநிலையை கண்டறிவது எப்படி ?

ஓசிடி என்ற இந்த மன பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ஏதேனும் எண்ணங்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். அவர்கள் சுயநினைவில் இருக்கும் போதே திரும்பத் திரும்ப ஒரே காரியங்களை செய்வார்கள்.

இன்னும் எளிதாக சொல்லப்போனால், அவர்களுக்கு தங்கள் கையில் அழுக்கு இருக்கிறது என்ற எண்ணம் தோன்றிய உடனே சென்று கையைக் கழுவுவார்கள். ஆனால், மீண்டும் கை அழுக்காக இருப்பது போல அதே எண்ணம் வரும். மீண்டும் சென்று கைகளை கழுவுவார்கள். மீண்டும் மீண்டும் அதே எண்ணம் தான் வரும். இப்போது மீண்டும் சென்று கை கழுவுவார்கள், இது மீண்டும்... மீண்டும் என்று நீண்டுகொண்டே போகும்.

OCD symptoms

ஓசிடியின் அம்சங்கள்:

ஓசிடி என்பதில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று அப்சசிவ், அதாவது ஒன்றைப் பற்றி மட்டுமே அவர்களின் எண்ணங்கள் தொடர்ந்து வருவது. மற்றொன்று கம்பல்சிவ்  என்று சொல்லப்படும் அந்த எண்ணங்களால் தூண்டப்படும் கட்டுப்படுத்த முடியாத அவர்களின் செயல்கள்.

உதாரணமாக வீட்டில் பூட்டு போட்டிருக்கிறதா என்ற சந்தேகத்துடன் மீண்டும் மீண்டும் சென்று பூட்டை இழுத்துப் பார்ப்பதை சொல்லலாம். நாம் ஏற்கனவே வீட்டை பூட்டியிருப்போம். ஆனாலும் நம் மனதில் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது வழக்கம். சாதாரண மனநிலையில் உள்ளவர்கள் வீட்டில் பூட்டை பூட்டியதை நினைவு படுத்திக்கொண்டு அடுத்த காரியத்துக்குச் சென்று விடுவார்கள். சில நேரங்களில் நம்மால் நினைவு படுத்த முடியாத சூழலில் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வேறு வேலைகளுக்கு சென்று விடுவோம்.

ஆனால், இந்த ஓசிடி வகை மனப் பிரச்னைகள் இருந்தால் அந்த நபரால் அப்படி எளிதில் நகர முடியாது. அடுத்த வேலைக்கு மாறவும் முடியாது. இந்த மனநிலை பிரச்னை உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் சென்று வீட்டின் பூட்டை சரி பார்ப்பார்கள்.

அறிகுறிகள் என்ன ?

வீட்டை பூட்டினோமா இல்லையா என்று அந்த பூட்டை சரிபார்த்துக் கொண்டே இருப்பது, கையைக் கழுவிக் கொண்டே இருப்பது, கேஸ் ஸ்டவ்வை மூடினோமா இல்லையா என்று சந்தேகப்பட்டு போய் போய் பார்த்துக் கொண்டிருப்பது, ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டே இருப்பது, அதிலிருந்து வெளிவர முடியாமலும் மாற முடியாமல் இருப்பது எல்லாம் இந்த மன நோயின் அறிகுறிகள்.

ஒரு சிலருக்கு கையைக் கழுவிக் கழுவி தோலே கிழிந்து வந்து விடும். அந்த அளவிற்கு அவர்களை ஓசிடி வாட்டி வதைக்கும். சில நேரங்களில் இந்த ஓசிடி மிதமான எண்ணங்களாகவும் இருக்கும். மேலும் இது நாளடைவில் தீவிரமடைந்து மற்றவர்களையோ அல்லது தன்னையோ காயப்படுத்திக் கொள்ளும் அளவுக்கோ இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுத்தம், ஒழுங்கு, காதல், காமம், வன்முறை, மதம் என்று ஓசிடி நோய் எந்த வகையிலும் உணர்வுகளை ஏற்படுத்தும். இந்த மன நிலையுடன் டிப்ரஷன் மற்றும் மன அழுத்தமும் சேரும்போது மனம் கூடுதலாக பாதிப்படைகிறது.

மேலும் படிக்க: குழந்தைகளுக்கு நீரிழிவு நோயா? இந்த ஒன்பது எச்சரிக்கை அறிகுறிகளை கவனியுங்கள்

இதற்கு ஒரே தீர்வு, இந்த மனநிலை மாற்றத்தை ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்து மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது தான். இந்த மனநிலைக்கு குணம் என்பது முழுமையாக இல்லாவிட்டாலும் இந்த உணர்வுகளையும் தோன்றும் எண்ணங்களையும் பெருமளவு குறைக்க முடியும் என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

Image source: google

Disclaimer