புத்தாண்டு என்றாலே கொண்டாட்டங்களும், கேக்குகளும் தான் நமது நினைவிற்கு வரக்கூடும். டிசம்பர் 31 ஆம் தேதி இரவு முதல் ஜனவரி பிறக்கும் 12 மணி வரை குத்தாட்டமும், கொண்டாட்டமும் தான் நிறைந்திருக்கும். கேக்குளை வெட்டி வாழ்த்துக்களைப் பரிமாறும் கலாச்சாரம் ஒருபுறம் இருந்தாலும் பிற நாடுகளில் பாரம்பரிய உணவுகளும் இந்த கொண்டாட்டதில் இடம் பெறுகின்றன. அப்படி என்ன ஸ்பெஷல் என்று தானே கேட்கிறீர்கள்? இதோ உங்களுக்காகவே சில நாடுகளில் வழக்கமாகக் கொண்டுள்ள பாரம்பரிய உணவுகள் குறித்த சுவாரஸ்சிய தகவல்கள் இங்கே…
மேலும் படிங்க: உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை இப்படி அனுப்புங்க?
புத்தாண்டும் உலக நாடுகளின் உணவுகளும்:
- ஜனவரி 1 அதாவது புத்தாண்டு பிறந்தாலே கேக்குகளோடு வாழ்த்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், பராம்பரியமாக ஸ்பெயின் நாட்டில் திராட்சைகள் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலாக புத்தாண்டு தினத்தில் திராட்சைகள் சாப்பிடவில்லை என்றால் அந்த ஆண்டு முழுவதும் துரதிஷ்டவசமாக அமையும் என்று நம்புகிறார்கள். இதனால் தான் புதிய ஆண்டு பிறக்க 12 வினாடிகள் இருக்கும் போது 12 திராட்சைகளை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று நினைப்பார்களாம்.. இவ்வாறு சாப்பிடும் போது ஆண்டின் 12 நாள்களும் அவர்களுக்கு சிறப்பானதாக அமையும் என்ற நம்பிக்கையில் தற்போது
- புத்தாண்டு தினத்தில் இத்தாலி நாட்டு மக்கள் பருப்பு வகைகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எப்போதும் உடலுக்கு ஆரோக்கியத்தையும், செழிப்பையும் தரக்கூடிய பருப்புகள் போன்று ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
- துருக்கி நாட்டு மக்கள் ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் தங்கள் வீட்டு வாசலில் மாதுளைகளை உடைத்து வைப்பார்களாம். நாம் எப்படி தேங்காய் சூரை விடுகிறோமோ? அதுப்போன்று மாதுளைளை அவர்கள் வீட்டு வாசலில் உடைப்பார்களாம். இவ்வாறு செய்யும் போது ஆண்டு முழுவதும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் வைத்துள்ளனர்.
- கேக்குகள் இல்லாமல் புத்தாண்டு நிறைவு பெறாது. ஒவ்வொரு நாட்டிலும் பல பராம்பரிய உணவுகள் இருந்தாலும் நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் கேக்குகள் வெட்டி கொண்டாடுவதால் மகிழ்ச்சியும், பாசிடிவ் எனர்ஜியும் நமக்கு கிடைக்கிறது.
- குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் தென் தமிழகத்தில் பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் உணவு மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இனிப்புகளோடு புத்தாண்டை கொண்டாடுவதால் ஆண்டு முழுவதும் வாழ்க்கை இனிப்பாகவே அமையும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
மேலும் படிங்க: புத்தாண்டில் நிதி ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா? பெண்களே இத பாலோ பண்ணுங்க!
இதுப்போன்று ஒவ்வொரு நாடுகளிலும் பல விதமான உணவுப்பொருள்கள் பராம்பரியமாக பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இந்த புத்தாண்டில் உங்களுக்குப் பிடித்த விஷயங்களை மேற்கொண்டு இந்த ஆங்கில புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடுங்கள்.