Valentines Day Dress Code : காதலர் தினத்தின்று எந்த நிறத்தில் ஆடை அணியலாம் ?

காதலர் தினத்திற்கும் நிறங்களுக்கும் பெரிதும் தொடர்பு உள்ளது. சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு என காதலர் தினத்தில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. 

Raja Balaji
valentines day dress code

காதலர் தினத்தில் நீங்கள் அணியும் ஆடையின் மூலம் பிறருக்கு நேரடியாக ஒரு தகலை தெரிவிக்கலாம். அதாவது நீங்கள் சிங்கிளாக இருந்தாலும் காதலித்து கொண்டிருந்தாலும் அல்லது காதல் தோல்வியில் இருந்தாலும் நீங்கள் அணியும் ஆடைகளின் நிறம் மூலம் அவற்றை வெளி உலகிற்கு வெளிப்படுத்த முடியும். ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டுள்ளது. இது காதலர் தின கொண்டாட்டத்தில் முக்கிய பகுதியாகும்.

காதலர் தினத்தன்று எப்படி ஆடை அணிவது என்பது குறித்து நீங்கள் ஆர்வமாக இருந்தால் அதற்கு இந்த கட்டுரை உதவும். காதலர் தினத்துடன் தொடர்புடைய நிறங்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, நீலம், இளஞ்சிவப்பு, கருப்பு, பச்சை, வெள்ளை, சாம்பல் மற்றும் பழுப்பு ஆகும். இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு ஆகியவை காதலர் தினத்தில் பொதுவாக அணியும் வண்ணங்களாகும். சிவப்பு என்பது அன்பையும், இளஞ்சிவப்பு என்பது மென்மையையும் குறிக்கிறது. காதலர் தினத்தில் உங்கள் ஆர்வமின்மையைக் குறிக்க கருப்பு அல்லது டேட்டிங்கில்  ஆர்வத்தைக் குறிக்க நீல நிறத்தை அணியலாம்.

சிவப்பு

சிவப்பு நிறம் காதலை குறிக்கிறது. நீங்கள் ஏற்கனவே காதலிக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த சிவப்பு நிற ஆடை அணிந்து அன்புக்குரியவருடன்  டேட்டிங் செல்லுங்கள். சாக்லேட், பூக்கள் போன்ற பரிசுகள் காதலர் தினத்தை கூடுதல் சிறப்பாக்கும்.

மஞ்சள்

மஞ்சள் நிறம் நீங்கள் சமீபத்தில் ஒருவரைப் பிரிந்திருப்பதைக் குறிக்கிறது. கனத்த இதயத்துடன் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மஞ்சள் நிறம் உணர்த்துகிறது

ஆரஞ்சு

காதலர் தினத்தில் மிகவும் பிரபலமான மற்றொரு நிறம் ஆரஞ்சு நிறமாகும். இது நீங்கள் யாருக்கோ ப்ரோபோஸ் செய்யத் தயாராகிவிட்டீர்கள் என்பதை உணர்த்துகிறது. ஆரஞ்சு நிற சட்டை அல்லது உடையை அணிந்து, பூக்கள் மற்றும் பரிசுகளுடன் காதல் உறவிடம் ப்ரோபோஸ் செய்யுங்கள்.

நீலம்

உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருக்கிறீர்கள் என்பதை நீலம் உணர்த்துகிறது. 

valentine day dress

இளஞ்சிவப்பு

இளஞ்சிவப்பு அணிந்திருந்தால் நீங்கள் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நபர் என்பதை உணர்த்துகிறது. நிச்சயதார்த்த தகவலை நண்பர்களிடம் சொல்வதற்கு இது சிறந்த வழியாகும்.

கருப்பு

கருப்பு நிறம் பலருக்கு பிடித்ததாக இருக்கலாம். ஆனால் காதலர் தினத்தில் கருப்பு நிறம் நிராகரிப்பைக் குறிக்கிறது. உங்களின் தற்போதைய மனநிலையை சித்தரிக்க கருப்பு உடையை அணியுங்கள். கறுப்பு நிறத்தைத் தேர்ந்தெடுப்பது நீங்கள் இப்போது யாருடைய அன்பையும் நம்பத் தயாராகவில்லை என்று அர்த்தம்.

பச்சை

பச்சை என்பது யாரிடமோ ப்ரோபோஸ் செய்து பதிலுக்காக காத்திருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. 

வெள்ளை

valentine day colour code

மகிழ்ச்சியான மற்றும் விரைவில் திருமணமாக இருக்கும் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த வெள்ளை ஆடைகளை அணியலாம். 

சாம்பல்

காதல் மீது ஆர்வமில்லை என்றால் அன்றைய தினம் சாம்பல் நிற ஆடை அணியுங்கள். சாம்பல் நிறத்திற்கு மற்றொரு மாற்று ஊதா நிற ஆடைகளை அணிய வேண்டும். இதுவும் அதே பொருளைக் குறிக்கிறது.

Disclaimer