உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்கள் எப்போதும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியப் பிரச்சினையை பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். பசி என்ற சிறிய வார்த்தை தான் உடல் பருமன் உட்பட பல பிரச்சினைகளை சந்திக்கும் நபர்களுக்கு பெரும் கவலையைத் தருகிறது.
உடல் எடையைக் கட்டுப்படுத்த சிறந்த உணவு முறையை கொஞ்சம் நாட்களுக்கு மட்டுமே பின்பற்றி விட்டு மீண்டும் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து விடுகிறது. உடல் பருமனாக உள்ள நபர்களுக்கு இது அடிப்படை பிரச்சினையாக இருக்கிறது. சிறந்த உணவுமுறையை பின்பற்ற ஆரம்பிக்கும் ஆயிரம் பேரில் 20 பேரை தவிர்த்து வேறு யாரும் அதை பின்பற்றுவதில்லை. 98 விழுக்காடு பேருக்கு சிறந்த உணவு முறையை பன்பற்றுவதில் சிரமம் இருக்கிறது. எனவே பசியை கட்டுப்படுத்தி உடல் எடையைக் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள் இங்கே...
பசியில் இரண்டு வகைகள் உள்ளன. அதாவது இரவில் எட்டு மணிக்குள் சாப்பிட்டு விட்டு காலை வரை சுமார் 12 மணி நேரம் வயிற்றை வெறுமனே வைத்திருந்தால் எடுக்கும் பசி மிகவும் எளிமையானது. வயிற்றில் இடமில்லை என்றாலும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அது அசாதாரணமான பசி. பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என நாம் மனதளவில் வருத்தப்பட வேண்டியதில்லை. பசி என்பது மனது தொடர்பான விஷயம் மட்டுமல்ல.
உடலில் Ghrelin என்ற ஹார்மோன் தான் பசியைத் தூண்டி சாப்பிட வைக்கிறது. உடலில் பசியை ஏற்படுத்துவதற்கான ஹார்மோன்களும், பசியை குறைப்பதற்கான ஹார்மோன்களும் உள்ளன. இன்சுலின் உடலில் பசியை கட்டுப்படுத்தும். உடல் பருமனாகி கொழுப்பு அதிமாகும் போது உடல் பாகங்கள் சரியாக செயல்பட தவறிவிடும்.
மேலும் படிங்க சர்க்கரை நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான வழிகள்
பசியை கட்டுப்படுத்தும் வழிகள்
தூக்கம்
நீங்கள் ஒழுங்காகத் தூங்கவில்லை என்றால் பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் செயல்பட தவறிவிடும். எனவே தினமும் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் தூங்கவும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்தால் பசி எடுக்கும் என்று மட்டுமே புரிந்து கொள்ளக் கூடாது. தீவிர உடற்பயிற்சி செய்யும் போது உடலில் உள்ள ஹார்மோன்கள் சிறப்பாக செயல்பட்டு பசியை கட்டுப்படுத்தும்.
மன அழுத்தம்
நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு விட்டாலே உடல் பருமன் தானாக குறைந்துவிடும்.
புரதம்
உடலுக்கு தேவையான புரதத்தை உணவில் உட்கொள்ளுங்கள். நல்ல புரதத்தை உட்கொள்வதால் பசியை அருமையாக கட்டுப்படுத்தலாம்.
கொழுப்பு உணவு
ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிட்டால் வயிறு எளிதில் நிரம்பி விடும். உங்களுக்கு அதிகளவில் பசிக்கவும் செய்யாது.
முழு உணர்வு
நீங்கள் ஒரு கிலோ கேரட்டை ஜூஸ் போட்டு குடித்தாலும் அது உங்கள் வயிற்றை நிரப்பாது. சிறிது நேரத்திலேயே வயிறு காலியாக இருப்பது போல உணர்வீர்கள். அதற்கு பதிலாக கால் கிலோ கேரட்டை கழுவி பச்சையாக சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் புரியும்.
மேலும் படிங்க நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு BMI வரம்பு என்ன ?
தண்ணீர்
தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பசியை கட்டுப்படுத்த முடியாது. தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
எலக்ட்ரோலைட்
லெமன் ஜூஸ், சூப் போன்றவை பசியை கட்டுப்படுத்தும் எலக்ட்ரோலைட் பானங்களை குடியுங்கள்
சாப்பிடும் வேகம்
உணவை நன்றாக மென்னு குறைந்தது அரை மணி நேரம் சாப்பிடுங்கள். அவசர அவசரமாக சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்தாது.