Celebrate Pongal with children: பொங்கல் பண்டிகையில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது இது தான்!

குழந்தைகள் கட்டாயம் பொங்கலின் வரலாறு, மரபுகள் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும்.

Jansi Malashree V
pongal with children

பண்டிகைகள் என்றாலே குழந்தைகளுக்குக் குதூகலம் தான். புத்தாடைகள் அணிவது முதல் விதவிதமான பலகாரங்களைச் சாப்பிடுவது என அந்நாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இதெல்லாம் வழக்கமான நடைமுறைகள் என்றாலும் பண்டிகையின் பாரம்பரியம் குறித்த தகவல்களைக் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த தைத்திருநாளில் உங்களது குழந்தைகளுடன் எப்படி பண்டிகையைக் கொண்டாடுவது? என்பது குறித்த இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். 

traditonal pongal

குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாட்டம்.

தமிழர்கள் கொண்டாடக்கூடிய கலாச்சார திருவிழாக்களில் ஒன்றாக உள்ள தைப்பொங்கல். சங்க காலம் முதல் இக்காலம் வரை பாரம்பரியம், வீரம், பண்பாடு என அனைத்தையும் பிரதிபலிக்கும் பண்டிகையாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்டிகையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், உங்களுக்குக் கட்டாயம் இதை சொல்லிக் கொடுக்கவும்.

மேலும் படிங்க: தை திருநாளில் மகிழ்ச்சி பொங்கும் வண்ண கோலங்கள்!

  • இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் மொபைல் போன்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். பண்டிகை நாட்களில் இதையெல்லாம் பெற்றோர்கள் தடுத்து நிறுத்தவும். மொபைல் பயன்பாட்டிற்குப் பதிலாக பொங்கலின் முக்கியத்துவம் மற்றும் அதன் கலாச்சார பிறப்பிடம் குறித்து சொல்லிக் கொடுக்கவும். வயதுக்கு ஏற்ப கதைகளாக சொல்லும் போது மிகவும் ஆர்வத்துடன் கேட்பார்கள்.
  • பொங்கல் திருநாளில் பொங்கல் பானைகள் பிரதான இடம் பிடிக்கும். எனவே பானைகளில் விதவிதமான டிசைன்கள் போடுவதற்குக் கற்றுக்கொடுக்கவும். கலைப் பொருள்களைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட முடியும் என பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கவும்.
  •  பொங்கல் பண்டிகையில் பராம்பரிய முறை சமையலுக்கு தனி இடம் உண்டு. அம்மாக்கள் செய்தாலும் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் சமையல் செய்ய கற்றுக் கொடுக்கவும்.
  • சுப நிகழ்ச்சிகளின் அடையாளம் கோலங்கள் என்பதால், சிறு வயதில் இருந்தே உங்களது குழந்தைகளுக்கு கோலங்கள் போடுவதற்கு கற்றுக்கொடுக்கவும். அதிலும் பொங்கல் திருநாளில் அதற்கேற்ற கோலங்களை வாசலில் போடுவதற்கு குழந்தைகளைப் பழக்கப் படுத்தவும். பண்டிகையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வடிவங்களையும் அவர்களுக்கு எப்படி மேற்கொள்வது என சொல்லிக்கொடுங்கள்.
  • இன்றைக்கு மாடர்ன்உடைகள், மேற்கத்திய ஆடைகளை அணியக்கூடிய மோகம் அதிகரித்துள்ளது. இதெல்லாம் எந்த நாள்களில் வேண்டுமென்றாலும்  அணிந்துக் கொள்ளலாம். ஆனால் பண்டிகை என்றாலே பாரம்பரிய ஆடைகளில் கவனம் செலுத்தவும். பாரம்பரிய ஆடைகள் என்னென்ன? எப்படி அணிய வேண்டும்? என்பது குறித்து சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும்.
  • பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக உள்ளது பாரம்பரிய விளையாட்டுகள். உரி அடித்தல், சாக்கு பந்தயம், தவளை போட்டி போன்ற வெளிப்புற விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்தும் போது மகிழ்ச்சியான மனநிலையை அவர்கள் அடைவார்கள்.
  • குழந்தைகளை பூஜை வழிபாடுகளில் ஈடுபடுத்துங்கள். இந்த பங்கேற்பு திருவிழாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
pongal games
  • குழந்தைகள் கட்டாயம் பொங்கலின் வரலாறு, மரபுகள் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும்.  எனவே பக்கத்து வீட்டு குழந்தைகள் மற்றும் உங்களது குழந்தைகள் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து வீடியோ அல்லது கதையின் வாயிலாக சொல்லிக் கொடுக்கவும்.
  • உடன்பிறப்புகள் அல்லது நண்பர்களுடன் சிறிய பொங்கல் சார்ந்த பரிசுகளைப் பரிமாறிக் கொள்ள குழந்தைகளைப் பழக்கப்படுத்தவும். இதில் கையால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், வரைபடங்கள் அல்லது பாரம்பரிய இனிப்புகள் என எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

 மேலும் படிங்க: அவனியாபுரத்தில் துள்ளிக்குதிக்கும் காளைகளைத் தழுவ காத்திருக்கும் காளையர்கள்!

இது போன்ற விஷயங்களையெல்லாம் உங்களது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதோடு, பண்டிகையின் போது எடுக்கும் புகைப்படங்களை ஆவணமாக்க சொல்லவும். எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் பராம்பரிய கலாச்சாரங்கள் தொடந்து கொண்டே தான் இருக்கும்.

 
 
Disclaimer