Red poha: ஹெல்தியான எளிதாக செய்யக்கூடிய சிவப்பு அவல் ரெசிபி

உடலுக்கு பல நன்மைகளை அள்ளித் தரும் சிவப்பு அவல் கொண்டு வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய உணவு ரெசிபிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Staff Writer
red aval

சிவப்பு அரிசி போஹா என்று கூறப்படும் சிவப்பு அவலில் வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், நார்ச்சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. நீங்கள் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிவப்பு அவல் சாப்பிடலாம். புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்ல விடாமல் தடுக்க சிவப்பு அவல் பெரிதும் உதவுகிறது என்று கூறப்படுகிறது. இதய கோளாறுகள், ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த சிவப்பு அவலை உணவில் சேர்த்து சாப்பிடலாம். ஒரு கப் சிவப்பு அவலில் 250 கலோரிகள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த சிவப்பு அவல் வைத்து எளிதாக சமைக்கக்கூடிய ரெசிபிக்கள் இதோ:

மேலும் படிக்க: தயிரிலும் சட்னி செய்யலாம். இதோ சிம்பிள் ரெசிபி டிப்ஸ்!

red aval pudding

சிவப்பு அவல் புட்டிங்: 

தேவையான பொருட்கள்:

1 கப் சிவப்பு அவல் 

1 லிட்டர் பால் 

1 கப் மில்க்மெயிட் அல்லது சர்க்கரை 

1 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் பொடி 

1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பாதாம் 

1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பிஸ்தா

2 கப் தண்ணீர்

செய்முறை:

  • ஒரு கப் சிவப்பு அவலை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். 
  • பத்து நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வெளியேற்றி சிவப்பு அவலை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பால் சேர்த்து கொதிக்க வைத்து அதோடு சிவப்பு அவலை கலந்து 15 நிமிடங்கள் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சமைக்கவும்.
  • இப்போது மில்க்மெய்ட் அல்லது சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி விடவும். 
  • இப்போது நறுக்கி வைத்த பாதாம், பிஸ்தாக்களை சேர்த்து கிளறி விடவும். அவ்வளவுதான் சிவப்பு அவல் புட்டிங் ரெடி!

 

சிவப்பு அவல் கட்லெட்: 

தேவையான பொருட்கள்:

1/2 கப் சிவப்பு அவல்

2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர்

1 வேக வைத்த உருளைக்கிழங்கு

1/4 துருவிய கேரட்

1/4 கப் வேகவைத்த பச்சை பட்டாணி

1/4 நறுக்கிய கேப்ஸிகம்

1 வெங்காயம் 

2 பச்சை மிளகாய் 

1 டேபிள்ஸ்பூன் துருவிய இஞ்சி 

1/2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பூண்டு

1/4 கப் கொத்தமல்லி 

1/2 டேபிள்ஸ்பூன் சிவப்பு மிளகாய் பொடி

1/2 டேபிள்ஸ்பூன் சாட் மசாலா 

1 1/2 கப் கடலைமாவு

1 டேபிள்ஸ்பூன் கான்பிளவர் மாவு

செய்முறை:

  •  ஒரு கிண்ணத்தில் சிவப்பு அவல் எடுத்து இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • பிறகு ஒன்று அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி இந்த சிவப்பு அவலை ஊற வைக்கவும்.
  • கடலைமாவு மற்றும் கான்பிளவர் மாவு சேர்த்து அதில் சிறிதளவு சில்லி ஃபிலேக்ஸ், உப்பு சேர்த்து மாவு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஊறவைத்த சிவப்பு அவலை ஒரு தட்டு அல்லது கிண்ணத்தில் எடுத்து உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி, வெங்காயம் மற்றும் கேப்ஸிகம் சேர்த்து கெட்டியான பதத்தில் கலந்து வைத்து கொள்ளுங்கள். 
  • அந்த மாவில் சிறிய உருண்டை பிடித்து கடலைமாவு கலவையில் சேர்த்து 15 நிமிடங்கள்  ஃப்ரிட்ஜில் வைக்கவும். 
  • 15 நிமிடங்களுக்கு பிறகு இந்த உருண்டைகளை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான சிவப்பு அவல் கட்லட் ரெடி.

 மேலும் படிக்க: வீட்டிலேயே சுவையான பைனாப்பிள் பாசுந்தி செய்யலாம்

red aval laddu

சிவப்பு அவல் லட்டு: 

தேவையான பொருட்கள்:

250 கிராம் சிவப்பு அவல்

300 கிராம் நாட்டு சர்க்கரை

2 டேபிள்ஸ்பூன் பால்

4 டேபிள்ஸ்பூன் தேங்காய்

1/2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் பொடி

1 டேபிள்ஸ்பூன் கிஸ்மிஸ்

1 டேபிள்ஸ்பூன் பாதாம்

1 டேபிள்ஸ்பூன் முந்திரி

1 டேபிள்ஸ்பூன் நெய்

செய்முறை: 

  • சிவப்பு அவலை  எடுத்து, நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்க ரெடியாக வைக்கவும். பாதாம், முந்திரியை, கிஸ்மிஸ் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சிவப்பு அவலை வறுக்கவும். பின்னர் வறுத்தெடுத்த அவலை மிக்சியில் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
  • அதே பாத்திரத்தில் சிறிது துருவிய தேங்காயை சேர்த்து வறுத்து எடுக்கவும். பிறகு சிவப்பு அவலை பொடி செய்த மிக்ஸியில் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 
  • இப்போது இந்த கலவையுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து திரும்பவும் அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதே பாத்திரத்தில் நெய் சேர்த்து பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து வறுக்கவும். இப்போது பொடி செய்து வைத்த அவலை இந்த நெய்யுடன் சேர்த்து கிளறவும்.
  • அடுப்பில் இருந்து இதனை இறக்கி வைத்து சிறிது நேரம் கழித்து உருண்டை வடிவில் லட்டு பிடிக்கவும். இப்போ சுவையான ஆரோக்கியமான சிவப்பு அவல் லட்டு ரெடி.
Image source: Google
 
Disclaimer