Pineapple recipes: குழந்தைகளுக்கான சுவையான அன்னாசிப் பழ ரெசிபிகள்!

பழங்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த சுவையான அன்னாசிப்பழ ரெசிபிகளை எளிய முறையில் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.

Staff Writer
recipes for kids

பிரேசில் நாட்டை தாயகமாக கொண்ட இந்த அன்னாசி பழத்தில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அன்னாசிப் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளதால் அஜீரணத்தை போக்கி பசியை தூண்டும். அதேபோல ஞாபக சக்தியை அதிகரிக்க அன்னாசிப்பழம் பெரிதும் உதவுகிறது. 

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் கூட அன்னாசிப்பழச் சாறுடன் சிறிது கசகசாவை அரைத்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும். அதேபோல அன்னாசிபழச் சாறுடன் தேன், மிளகுத்தூள் கலந்து சாப்பிட்டால் இருமல் சளி தொல்லை குணமாகும். இந்த பழத்தில் கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க இது பெரிதும் உதவுகிறது. பழங்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த சுவையான அன்னாசிப்பழ ரெசிபிகளை செய்து கொடுங்கள்.

அன்னாசி பழம் ராகி அடை: 

pineapple adai

தேவையான பொருட்கள்:

  • அரை அன்னாசிப்பழம்
  • ஒரு கப் ராகி மாவு
  • அரை கப் நாட்டு சக்கரை
  • கால் டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி
  • ஒரு டேபிள் ஸ்பூன் நெய்
  • உப்பு தேவையான அளவு

அன்னாசி பழம் ராகி அடை செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, உப்பு, நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவை அரை மணி நேரம் மூடி ஊற வைக்க வேண்டும். 
  • இப்போது ஒரு கடாயில் நாட்டு சர்க்கரையை சேர்த்து அதனை உருக்கி பாகு எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சர்க்கரை பாகில் சிறிய சதுர வடிவில் நறுக்கி வைத்துள்ள அன்னாசிப்பழ துண்டுகளை சேர்க்கவும். உங்களுக்கு வேண்டுமென்றால் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து இதனோடு சேர்க்கலாம். 
  • இப்போது வாழ இலையை துண்டுகளாக வெட்டி தீயில் வாட்டி எடுக்க வேண்டும். பிறகு அந்த இலையில் சிறிய உருண்டை ராகி மாவை எடுத்து தட்டி அதற்கு உள்ளே சர்க்கரை பாகில் வைத்த அன்னாசிப்பழ துண்டுகளை சேர்த்து இலையுடன் மூடிவிட வேண்டும். 
  • இதே போல இலைகளில் ராகி மாவையும் அன்னாசி பழத்தை சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஹெல்தியான அன்னாசிப்பழ ராகி அடை ரெடி.

 மேலும் படிக்க: ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த 3 கீரை ரெசிபிகள்!

அன்னாசிப் பழம் அல்வா:

pineapple halwa

தேவையான பொருட்கள்:

  • ஒரு அன்னாசி பழம்
  • ஒரு கப் ரவை
  • கால் கிலோ சர்க்கரை
  • சிறிதளவு கேசரி பவுடர்
  • ஒரு சிட்டிகை உப்பு
  • இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்
  • ஏலக்காய் பொடி
  • அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • ஒரு கப் முந்திரி

மேலும் படிக்க: வீட்டிலேயே சுவையான பைனாப்பிள் பாசுந்தி செய்யலாம் 

அன்னாசி பழம் அல்வா செய்முறை:

  • அன்னாசி பழத்தை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 
  • பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய்  ஏதும் சேர்க்காமல் ஒரு கப் ரவையை மட்டும் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். 
  • அதே கடாயில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நறுக்கி வைத்த அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். அல்வா வண்ணத்திற்கு உங்களுக்கு பிடித்த கலரில் கேசரி பவுடர் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். 
  • இப்போது பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும். அதில் சர்க்கரைப் பாகுடன் உள்ள அன்னாசி பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். 
  • பின்னர் சிறிதளவு உப்பு ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
  • தண்ணீர் நன்கு கொதி வரும் நிலையில் அதில் வறுத்து வைத்த ரவையை சேர்த்து கிளறி விடுங்கள். ரவை கட்டி பிடிக்காத நிலையில் நன்று கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான அன்னாசி அல்வா ரெடி.

Image source: google

Disclaimer