Parenting Tips: சிறந்த பெற்றோராக இருக்க வேண்டுமா? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை தான்!

பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் உறவை மேம்படுத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தையாக மாற வேண்டும். 

Jansi Malashree V
Important of child   parent relationship

பெற்றோர்களாக  இருந்து குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் கடினமாக வேலை. அதிலும் உங்களது குழந்தைகளுக்கு சிறந்த பெற்றோராக இருக்க வேண்டும் என்றால் சொல்லவே தேவையில்லை. உங்களது வாழ்க்கை சூழலை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். பிடித்த விஷயங்களையெல்லாம் குழந்தைகளுக்காக கொஞ்சம் ஒதுக்கி வைக்க வேண்டும். இதெல்லாம் நீங்கள் கடைப்பிடித்தால் சமூகத்தில் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்கலாம். பெற்றோர்-குழந்தை உறவை வலுப்படுத்துவது எப்போதும் எளிதானது அல்ல. குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உறவை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவல்களை இங்கே உங்களுக்காக நாங்கள் பதிவிடுகிறோம்.

child care

பெற்றோர்- குழந்தைகள் உறவுகள் வலுப்பெறுதல்:

மேலும் படிங்க: பணியிடத்தில் பெண்களுக்கு அதிகரிக்கும் மன அழுத்தம்; தவிர்ப்பது எப்படி?

சேர்ந்து விளையாடுதல்:

பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் உறவை மேம்படுத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தையாக மாற வேண்டும்.  நீங்கள் சிறு வயதில் என்ன செய்தீர்கள்? என்னவெல்லாம் உங்களது பெற்றோர்களிடம் ஆசைப்பட்டீர்களோ? அதையெல்லாம் உங்களது குழந்தைகளின் வாயிலாக அடைய முயற்சி செய்யலாம். குழந்தையோடு குழந்தையாக பெற்றோர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது, பாடல்கள் பேடுவது, ஆடுவது, கைவினைப் பொருள்களை மேற்கொள்வது, கப்பல் செய்து விளையாடுவது போன்ற பல விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளலாம். இத்தகைய நடைமுறையால் உங்களது குழந்தைகளுக்கு நீங்கள் சிறந்த நண்பனாக மாற முடியும். இதோ உங்களிடம் எந்த விஷயங்களையும் மறக்காமல் அவர்கள் சொல்வதற்கு தயக்கம் காட்ட மாட்டார்கள்.

குழந்தைகளின் குறைகளைக் கேட்டல்: 

குழந்தைகள் தானே அவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிற போகிறது? என்ற நினைப்பதே தவறான செயல். உடல் ரதீயாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் குழந்தைகள் ஏதாவது குறைகளை உங்களிடம் சொல்ல வந்தால் காது கொடுத்து கேட்கவும். அதிலும் தேவையில்லாமல் கத்தாமல் நிதானமாக கேட்கும் போது எந்த பிரச்சனையாக இருந்தால் மறைக்க மாட்டார்கள். இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வலுப்படுத்துவதோடு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்கவும் உதவியாக இருக்கும்.

important for child care

எல்லைகளை அமைத்தல்:

என்ன தான் குழந்தைகளுக்கு சுதந்திரமான சூழலை உருவாக்கினாலும் பெற்றோர்கள் அவர்களுக்கு எல்லைகளை அமைத்துத் தர வேண்டும். தவறான செயல்கள் என்ன? என்னவெல்லாம் செய்யக்கூடாது? என்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கவும். குழந்தைகளுக்காக எல்லைகளை பெற்றோர்கள் நிர்ணயிக்கும் போது, அவர்கள் எந்த விஷயத்திற்கெல்லாம் கோபமடைவார்கள், எதற்கெல்லாம் அடம் பிடிக்கிறார்கள்? என்பதை எளிமையாக நீங்கள் தெரிந்துக் கொள்ள முடியும்.

பாடம் கற்பித்தல்: 

அலுவலக பணி மற்றும் வீட்டு வேலையால் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுப்பது என்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம். ஆனாலும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக டியூசன் அனுப்புகிறார்கள். இதெல்லாம் தவறான செயல். முடிந்தவரை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் எதை விரும்புகிறார்கள்? என்னவாக ஆசைப்படுகிறார்கள்? என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.  சிறு சிறு விஷயங்களில் அவர்களுக்கு ஒத்துழைப்புடன் இருக்கும் போது குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் மீது நம்பிக்கையும், மரியாதையும் வளரக்கூடும்.

பொது விஷயங்களைப் பற்றி பேசுதல்:

குடும்பத்தைப் பற்றியும் பள்ளிப் பாடங்களைப் பற்றி மட்டும் பேசுவதால் குழந்தைகள் அனைத்தையும் அறிந்துக் கொள்ள முடியாது. சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு செய்தித்தாள்கள் படிப்பது, புத்தகங்கள் படிப்பதைக் கற்றுக் கொடுக்கவும். வாரத்திற்கு ஒரு முறையாவது ஏதாவதொரு தலைப்புகளைக் கொடுத்து பேச பழகிக் கொடுங்கள். அவர்களின் அச்சத்தைப் போக்கு உதவியாக இருக்கும். பெற்றோர்கள் மீது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

 மேலும் படிங்க: தினமும் மன அழுத்தம் பாடாய்ப்படுத்துகிறதா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

family bonding

இதோடு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து வாரத்திற்கு ஒருமுறையாவது உணவு உட்கொள்ளுங்கள். உணவுகளில் எது ஆரோக்கியமானது? எது சிறந்தது? என அவர்களுக்கு கற்றுக்கொடுக்க முயற்சி செய்வது நல்லது. பல வேலைப்பளுவால் என்ன தான் பெற்றோர்கள் சோர்வாக இருந்தாலும் இந்த மேற்கூறியுள்ள விஷயங்களைத் தொடர்ச்சியாக கற்றுக்கொடுத்தாலே பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் உறவு வலுப்பெறும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

 Image credit - Google

 

 

 

 

Disclaimer