பிரியாணி பிடிக்காத நபரையே நம்மால் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பிரியாணி அனைவருக்கும் பிடித்த உணவாக உள்ளது. குறிப்பாக ஹைதராபாத் தம் பிரியாணி பலருக்கும் பிடித்த உணவாக மாறி உள்ளது. ஏனென்றால் இதன் அருமையான சுவை மற்றும் மென்மையான நறுமணம் கொண்ட ஹைதராபாத் பிரியாணி எங்கு கிடைக்கும் என பலரும் தேடி சாப்பிட்டு வருகின்றனர்.
விருப்பமான உணவின் தரவரிசை குடித்து அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் எப்போதும் பிரியாணி தான் முதலில் வரும். அந்த வகையில் ஸ்விக்கி நிறுவனம் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்திய போது சில நொடிகளில் அதிகமான பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டது தெரிய வந்தது.
பிரியாணி என்று வரும்போது ஹைதராபாத் பெயரை சொல்லாமல் இருப்பது எப்படி? அந்த அளவிற்கு ஹைதராபாத் தம் பிரியாணி தமிழக மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் பிரியாணியின் அறுசுவை உணவாக காணப்படுகிறது. பிரியாணி பிரியர்கள் எப்போதும் தங்களுக்கு பிடித்த பிரியாணி உணவை ஹோட்டல்களில் மட்டும் தான் சாப்பிட்டு வருகின்றனர். இதை எப்படி வீட்டில் செய்வது என்ற கேள்வி பலருக்கும் வரும்.
நாங்கள் கொடுக்கும் குறிப்புகளை வைத்து நீங்கள் வீட்டிலேயே எளிய முறையில் ஹைதராபாத் தம் பிரியாணி செய்யலாம். இனிமேல் நீங்கள் ஹோட்டல் சென்று சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும் படிக்க: சிக்கன் கோடி வேப்புடு ருசிக்க தயாரா ?
குறிப்பாக அசைவ பிரியர்களின் தவிர்க்க முடியாத உணவான பிரியாணியை நாம் வீட்டிலேயே எப்படி செய்வது. சுவையான ஹைதராபாத் தம் பிரியாணி எப்படி வீட்டிலேயே எளிய முறையில் செய்வது என்பது குறித்து இதில் காணலாம்.
ஹைதராபாத் தம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயத்தை தேவைக்கேற்ப எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி கடாயில் வைத்து, இளஞ்சிவப்பு நிறம் வரும் வகையில் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின்பு மட்டன் அல்லது சிக்கன், ஒரு கிலோ பாஸ்மதி அரிசியையும் தனித்தனியாக அரை வேக்காட்டில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 1 கிலோ சிக்கன் அல்லது மட்டன் இறைச்சி
- 1 தேக்கரண்டி உப்பு
- 2 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது
- 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
- (சுவைக்க வறுத்த பழுப்பு வெங்காயம்)
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 3-4 இலவங்கப்பட்டை குச்சிகள்
- 1 தேக்கரண்டி சீரகம்
- 4 கிராம்பு
- ஒரு சிட்டிகை மசிட்டோ சுவை கொண்ட புதினா இலைகள்
- 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 250 கிராம் தயிர் தேக்கரண்டி நெய்
- 750 கிராம் அரை சமைத்த அரிசி
- 1 டீஸ்பூன் குங்குமப்பூ
- 1/2 கப் தண்ணீர்
- 1/2 கப் எண்ணெய்
ஹைதராபாத் தம் பிரியாணி செய்வது எப்படி?
- 1. முதலில் இறைச்சியை சுத்தம் செய்யவும். இறைச்சியை சுத்தம் செய்த பிறகு, இறைச்சி, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள், பச்சை மிளகாய் விழுது, வறுத்த பழுப்பு வெங்காயம், ஏலக்காய் தூள், இலவங்கப்பட்டை, சீரகம், கிராம்பு, மாஸ், புதினா இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- 2. இந்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக நன்றாக கலக்கவும்.
- 3. அனைத்து பொருட்களையும் கலந்த பிறகு, தயிர், நெய், பாதி வேகவைத்த அரிசி, குங்குமப்பூ, தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். இந்த பொருட்கள் அனைத்தையும் மீண்டும் நன்றாக கலக்கவும்.
- 4. கடாயின் விளிம்புகளில் ஒட்டும் மாவை தடவி, பின்னர் ஒரு மூடியால் மூடி, சுமார் 25 நிமிடங்கள் சமைக்கவும்.
- 5. உங்கள் சுவையான ஹைதராபாத் பிரியாணி தயார்.
நீங்கள் அதை நறுக்கிய கேரட் மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறலாம்.
மேலும் படிக்க: சத்தான, சுவையான ராகி அடை...டேஸ்ட்டாக எப்படி செய்வது?