இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், வாழ்க்கைமுறை, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது, ஆரோக்கிம் இல்லாத பழக்கங்கள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற பிரச்சனைகள் நாளடைவில் அவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு, சிறுநீரக பிரச்சனை, மாரடைப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் இன்றைக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக காணப்படுகிறது. உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் உடற்பயிற்சி, யோகா, பேலியோ டயட், கீட்டோ டயட் என பல முறைகளை பரிந்துரைத்தாலும் தற்போது அதிக கவனம் ஈர்த்து வருகிறது இந்த இன்டர்மிட்டண்ட் டயட்.
இன்டர்மிட்டண்ட் டயட் என்றால் என்ன?
இன்டர்மிட்டண்ட் டயட் என்பது 16:8 உணவு முறை திட்டம். அதாவது 8 மணி நேரம் மட்டுமே நீங்கள் உணவு சாப்பிடலாம், மீதமுள்ள 16 மணி நேரமும் உணவு ஏதும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அந்த 16 மணிநேரத்தில் தண்ணீர் குடிக்கலாம் மற்றும் பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடிக்கலாம். இப்படி குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது நம் உடலில் உள்ள கொழுப்புக்களை எரித்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நம் உடல் எடை குறைக்க உதவுகிறது. இந்த டயட் முறையை பின்பற்றி பலரும் எளிதில் உடல் எடை குறைப்பது நாம் பார்த்திருப்போம். இந்த டயட் உணவு முறையில் பல நன்மைகள் இருந்தாலும் அதன் பக்க விளைவுகள் பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் இன்டர்மிட்டண்ட் டயட் உணவு முறையை பின்பற்றும் பெண்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க: தினமும் 3 ஏலக்காய் சாப்பிட்டால் போதும்!
அதன் பக்க விளைவுகள் என்ன?
கருவுறுதல் பாதிக்கும்:
உடல் எடையை குறைக்க உதவும் இந்த இன்டர்மிட்டண்ட் டயட் முறை பெண்களிடையே குழந்தையின்மை பிரச்சனையை அதிகரிக்க செய்கிறது என்று சமீபத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இன்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் செய்யும் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்கள் பாதிப்படைகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மன அழுத்தம்:
இந்த இன்டர்மிட்டண்ட் டயட் முறையை பின்பற்றும் போது, நாம் வழக்கமாக உணவு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிடுகிறோம். அது அதிக பசியை தூண்டுகிறது. இதனால் நம் உடலுக்கு தேவையான கலோரிகள் குறைந்து மன அழுத்தம், பசி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தூக்கமின்மை:
சரியான வேலைகளில் உணவு சாப்பிடாமல் தவிர்ப்பது தூக்கத்தை பாதிக்க கூடும் என்று பல மருத்துவ ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. வயிறு நிறைய சாப்பிடும் போது நல்ல ஆரோக்கியமான தூக்கத்தை பெறலாம்.
மயக்கம்:
தலைவலி, தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் சரியான உணவு முறை இல்லாவிட்டாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இது உங்கள் உடல் நிலையை பாதித்து தலைவலியை கூட ஏற்படுத்தலாம்.
மலச்சிக்கல்:
நம் உடல் நாம் உட்கொள்ளும் உணவை ஜீரணிக்க அமிலத்தை உருவாக்கும். உடலுக்கு தேவையான உணவுகளை சரியான நேரங்களில் உட்கொள்ளாத போது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். மேலும் இதனால் வயிற்று வலி, வீக்கம், நெஞ்செரிச்சல், குறைவான குடல் இயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் படிக்க: தினமும் பழைய சோறு சாப்பிட வேண்டியதற்கான காரணங்கள்
தலை முடி உதிர்வு:
இந்த இன்டர்மிட்டண்ட் டயட் மூலம் நம் உடலுக்கு தேவையான கலோரி அளவை நாம் கட்டுப்படுத்துகிறோம். சரியான உணவுகளை உட்கொள்ளாத போது முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. நம் உணவில் நிறைந்திருக்கும் வைட்டமின் பி மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் முடி ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து நமக்கு கிடைக்காமல் போகும்போது தலைமுடி வலுவிழந்து முடி உதிர்வு ஏற்படக்கூடும்.