போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் சீர்கேடுகளை விளக்கி அதனை ஏன் ஒழிக்க வேண்டும் என தனது திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அனைத்து படங்களிலும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
கைதி படத்தில் போதைப் பொருள் விற்பனைக்காக காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்யத் துணியும் கும்பலை ஹீரோ எப்படி தடுக்கிறார் என விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லி இருப்பார் லோகேஷ். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஒரு படி மேலே சென்று போதைப் பொருளினால் சமுதாயத்தில் ஏற்படக்கூடிய சீர்கேடு, பாதிப்புகள் குறித்து மிகத் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்திருப்பார்.
விக்ரம் திரைப்படம் வெளியாகும் சில மணி நேரங்களுக்கு முன்பாகக் கைதி படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்குமாறு ரசிகர்களை லோகேஷ் அறிவுறுத்தி இருந்தார். திரைப்படத்தைத் திரையரங்கில் காணும்போது விக்ரம் படம் கைதியின் தொடர்ச்சி எனத் தெரியவந்தது. இதையடுத்து ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ், டிசி சினிமேட்டிக் யூனிவர்ஸ் போல கைதி, விக்ரம் படங்களை லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் என ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.
இதுவும் நல்லா இருக்கே என லியோ படத்தை லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸில் இணைத்தார் லோகேஷ் கனகராஜ். இதனால் ரசிகர்களுக்கு கைதி 2, விக்ரம் 2 படங்கள் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகாகி இருக்கிறது. ஆனால் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸிற்கு இடைவெளி விட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஸ்டாண்ட் அலோன் படம் எடுக்கத் தயாராகி வருகிறார்.
மேலும் படிங்க அயலான் படத்தில் திடீரென இணைந்த சித்தார்த்?
இதனால் LCU அப்டேட் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் கைதி படத்தில் காவல்துறை அதிகாரியாகவும், விக்ரம் படத்தில் கமலின் மாஸ்க் அணிந்த கும்பலில் ஒருவராகவும் நடித்திருந்த நரேன் LCU குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கார்த்தியின் கைதி 2 படத்திற்கு முன்பாக LCU-வின் தொடக்கப்புள்ளி குறித்து குறும்படம் ஒன்று வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இதை லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே திட்டமிட்டு விட்டதாகவும், குறும்படம் பத்து நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கும் எனவும் நரேன் கூறினார்.
நரேனின் இந்தத் தகவல் LCU ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
Naraien In Latest Pressmeet Says Before Kaithi2 There Will Be A 10 Minute Short Film Beginning Of Lcu 🥵🔥...#LokeshKanagaraj#Kaithi2#Vikram#Rolex#Leopic.twitter.com/KDotH9hMc8
— OTT Thankan 2.0 (@ott_thankan) December 13, 2023