பொங்கல் பண்டிகையைத் தித்திப்புடன் கொண்டாடி மகிழ அனைவரது வீட்டிலும் சர்க்கரை பொங்கல் சமைப்பது இயல்பே. சிலருக்கு சர்க்கரை பொங்கல் ருசிக்க வேண்டும் என ஆசை இருக்கும் ஆனால் அதை எப்பது சரியாக சமைப்பது என தெரியாது. குழைந்து விட்டால் சர்க்கரை பொங்கலின் ருசி போய்விடும். எனவே சர்க்கரை பொங்கல் தயாரிப்புக்கான பொருட்களை எந்த அளவுகோளில் பயன்படுத்த வேண்டும், எவ்வளவு நேரம் சமைக்க வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துள்ளோம்.
சர்க்கரை பொங்கல் செய்யத் தேவையானவை
- பச்சரிசி
- பாசி பருப்பு
- தண்ணீர்
- நெய்
- பால்
- பாகு வெள்ளம்
- முந்திரி
- லவங்கம்
- ஏலக்காய்
- சாதிக்காய்
- உப்பு
- திராட்சை
செய்முறை
- முதலாவதாக 200 கிராம் பிடிக்கும் கப் ஒன்றில் பச்சரிசி முழுவதுமாக எடுத்துக் கொள்ளவும்
- அடுத்ததாக பச்சரிசியுடன் சேர்த்து சமைப்பதற்கு 50 கிராம் பாசி பருப்பை எடுத்துக் கொள்ளவும்
- இவை இரண்டையும் சேர்த்து தண்ணீரில் நான்கு முறை நன்கு கழுவவும். ஏனென்றால் அரிசியில் இருக்கும் தூசி, அதைப் பாலிஷ் செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ரசாயனம் எதுவாக இருந்தாலும் அது சமைக்கும் முன்பாக நீக்கப்பட வேண்டும்
- தற்போது ஒரு பெரிய குக்கரில் கழுவிய பச்சரிசி மற்றும் பாசி பருப்பை போடவும். இதில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றுங்கள்.
- இதன் பிறகு பச்சரிசியை அளவிட பயன்படுத்திய கப் கொண்டு அதில் அரை கப் பால் எடுத்து குக்கரில் ஊற்றவும்
- மீண்டும் அதே கப் கொண்டு நான்கு முறை தண்ணீர் எடுத்து குக்கரில் சேர்க்கவும்
- மிதமான சூட்டில் வைத்து ஆறு முறை விசில் அடித்தவுடன் அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள்
- தற்போது அரிசியை அளவிட பயன்படுத்திய கப் கொண்டு அதில் இரண்டு முறை பாகு வெள்ளம் எடுத்துக் கொள்ளவும்
- நாம் பாகு வெள்ளத்தை தேர்ந்தெடுக்க காரணம் சர்க்கரை பொங்கலின் நிறத்திற்காகவும் அதன் தனித்துவமான சுவைக்காகவும்
- இதன் பின்னர் ஒரு பேனில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். தண்ணீர் கொதித்த பிறகு பாகு வெள்ளத்தை போடவும்
- இரண்டு நிமிடங்களில் பாகு வெள்ளம் உருகத் தொடங்கி அதில் இருக்கும் அழுக்கு, தூசி ஆகியவை வெளியேறிவிடும்
- இதற்கு ஒரு வடிகட்டி பயன்படுத்திய பிறகு மீண்டும் ஆறு முதல் ஏழு நிமிடங்களுக்கு பாகு வெள்ளத்தை உருக்கவும். ஒரு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள்.
- தற்போது ஒரு பெரிய கடாயில் ஏழு டீஸ் ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடான பிறகு மூன்று லவங்கம், தேவையான அளவு முந்திரி போடவும்
- முந்திரி பொறிந்தவுடன் வேகவைத்த பச்சரிசி - பாசி பருப்பை மொத்தமாக கடாயில் சேர்க்கவும்.
- தற்போது ஒரு பெரிய கடாயில் 7 டீஸ் ஸ்பூன் நெய் ஊற்றி, 3 லவங்கம், தேவையான அளவு முந்திரி போடவும்
- அது சற்று பொறிந்தவுடன் வேகவைத்த பச்சரிசி மற்றும் பாசி பருப்பை கடாயில் மொத்தமாக சேர்க்கவும்
- நெய்யுடன் நன்றாகக் கலக்கும்படி கிண்டிவிட்டு காய்ச்சி வைத்திருக்கும் வெள்ளைப் பாகை ஊற்றுங்கள்
- ஏழு முதல் எட்டு நிமிடங்களுக்கு இதனை வேகவைக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை சாதிக்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்
- 50 விழுக்காடு சமைத்த பிறகு மூன்று ஸ்பூன் சேர்க்கவும், அதே போல 90 விழுக்காடு சமைத்த பிறகு ஒன்றரை ஸ்பூன் நெய் சேர்க்கவும்
- இறுதியாக ஒரு சிறிய பேனில் நெய் ஊற்றி திராட்சையை வறுத்து, சர்க்கரை பொங்கலை அடுப்பில் இருந்து எடுத்தபிறகு சேர்க்கவும்.
- அவ்வளவு தான் பொங்கல் பண்டிகையைத் தித்திப்பாக்கிடும் சர்க்கரை பொங்கல் தயார்.
மேலும் படிங்க Andhra Bendakaya Vepudu - சுவையான வெண்டைக்காய் வேப்புடு ரெசிபி