Republic Day outfits : குடியரசு தினத்தன்று அணிவதற்கான மூவர்ண ஆடைகள்

குடியரசு தினத்தன்று தனித்துவமான ஆடைகளை அணிந்து தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என ஆசையா ? எந்த மாதிரியான ஆடைகளை தேர்வு செய்யலாம் என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Raja Balaji
tricolor dress

எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு அழகாகத் தோன்ற வேண்டும் என ஒவ்வொரு பெண்ணும் நினைப்பது யதார்த்தமான விஷயமாகும். அதிலும் தேசத்திற்கான கொண்டாட்டம் என வரும் போது பெண்களின் ஆடை அலங்காரத்தில் கூடுதல் சிறப்பு இருக்கும். ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் அனைவரும் மிகுந்த மரியாதை அளிக்கும் தேசியக் கொடி முக்கிய கவனம் பெறுகிறது. 

தேசபக்தியை வெளிப்படுத்தும் இந்த நாளில் இந்தியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அன்றடைய தினம் எங்கு சென்றாலும் காவி வெள்ளை, நீலம் மற்றும் பச்சை ஆகிய நான்கு வண்ணங்களில் ஆடை அணிவது உங்களை பிரகாசமாகக் காண்பிக்கும். அன்புக்குரியவர்களின் பாராட்டை பெற்று மிகுந்த உற்சாகமும் அடைவீர்கள். குடியரசு தினத்தன்று என்ன ஆடை அணிய வேண்டும் என சந்தேகம் இருந்தால் இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

Tricolor Republic Day ideas

மூவர்ண துப்பட்டா

மிகவும் எளிமையான தோற்றத்தில் தேசபக்தியை வெளிப்படுத்த விரும்பினால் குடியரசு தினத்திற்கு இந்த ஆடை சிறந்த தேர்வாகும். வெள்ளை நிற குர்தா மற்றும் சுடிதாருடன் மூவர்ண துப்பட்டாவை அணியுங்கள். வண்ணங்கள் மறையாமல் இருக்க மடிப்பதைத் தவிர்க்கவும். காதணிகள் மற்றும் வளையல்கள் போன்ற பாரம்பரிய இந்திய நகைகளை அணியுங்கள். பெண்களுக்கான எளிமையான குடியரசு தின ஆடைகளில் இதுவும் ஒன்று.

ஆரஞ்சு புடவை

ஒற்றை நிற புடவையை அணிவது குடியரசு தினத்திற்கான சிறந்த தேர்வாக இருக்கலாம். எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பார்டர் மற்றும் பளிச்சென தெரியும் ஆரஞ்சு நிறத்தில் அழகான புடவையை நீங்கள் தேர்வு செய்யலாம். 

ஆரஞ்சு - பச்சை பார்டரில் வெள்ளை புடவை

ஆரஞ்சு - பச்சை நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவை குடியரசு தினத்திற்கான சிறந்த ஆடை குறியீடாகும். ஆரஞ்சு - பச்சை நிற பார்டர் இந்தியக் கொடியில் உள்ள நிறங்களை குறிக்கிறது. சிவப்பு அல்லது நீல நிறத்தில் இரவிக்கை அணியுங்கள்.   

பாரம்பரிய ஆரஞ்சு சல்வார் சூட்

குடியரசு தினம் என்பது இந்தியாவின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடும் நேரமாகும். பாரம்பரிய அனார்கலி சல்வார் ஆடையானது ஆரஞ்சு நிறத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பிளாக்கெட்டுடன் பாரம்பரியத்தின் அடையாளமாகத் தெரியும்.

வெள்ளை நிறத்தில் எளிய ஆடை

ஜனவரி 26 அன்று அணியக்கூடிய ஆடையில் வெள்ளை நிறம் கட்டாயமாக இடம் பெற வேண்டும். வெள்ளை என்பது உண்மை மற்றும் அமைதியைக் குறிக்கும் நிறமாகும். வெள்ளை நிற ஆடை பாரம்பரியம் மற்றும் எளிமையை ஒருங்கிணைக்கிறது. இந்த புடவை குடியரசு தினத்திற்கு ஏற்றது.

Republic day dress

பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் மாணவிகள் தேசிய கொடியின் நிறத்தில் ஆரஞ்சு பேண்ட், பச்சை கலர் மினி டாப்ஸ் அணியலாம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer