Ragi Adai Recipe : சத்தான, சுவையான ராகி அடை...டேஸ்ட்டாக எப்படி செய்வது?

ஊட்டச்சத்து மிகுந்த கேழ்வரகை வைத்து ருசியான அடையை வீட்டில் எப்படி செய்வது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.

S MuthuKrishnan
food strong

கேழ்வரகு சிறுதானிய வகைகளில் ஒன்றாகும். இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவி செய்கிறது. கேழ்வரகு வைத்து களி, புட்டு, தோசை, அடை, கூழ்  என பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். கேழ்வரகு சேர்த்து செய்யப்படும் எந்த வகை உணவாக இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் சத்தான ஆரோக்கியமான ராகி அடை செய்வது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

ராகி அடையின் நன்மைகள் 

raagi inside

நமது தினசரி உணவு முறையில் கேழ்வரகில் செய்யப்படும் உணவினை காலை அல்லது இரவில் சாப்பிடலாம். ராகியில் செய்யப்படும் உணவு வகைகளை முடிந்த அளவு நாம் நமது உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குறிப்பாக பெண்களின் உடலில் உள்ள சர்க்கரை அளவை கேழ்வரகு பெருமளவில் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை அளவை குறைப்பதோடு இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் பற்களுக்கும் உடலில் உள்ள முக்கியமான எலும்புகளுக்கும் இது மிகவும் நல்லது. கேழ்வரகில் புரதச்சத்து அதிகம் உள்ளது.இது நமது உடலையும் மூளையையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

கேழ்வரகை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். ஆரோக்கிய குணம் மிகுந்த கேழ்வரகை  அடையாக செய்து காலை மாலை வேலைகளில் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் ராகி அடை கொடுத்தால் மிகவும் நல்லது.

சுவையான ராகி அடையை வீட்டில் எளிய முறையில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கேழ்வரகு மாவு 3 கப்
  • பெரிய வெங்காயம் 2
  • சீரகம் இரண்டு ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் மூன்று
  • கடுகு உளுந்து ஒரு ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  • வேர்க்கடலை பொடி இரண்டு ஸ்பூன்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவைக்கேற்றவாறு
  • நல்லெண்ணெய் ஏழு டீஸ்பூன்

செய்முறை 

  • முதலில் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  • அகண்ட பாத்திரத்தில் ராகி மாவை போட்டு தேவைக்கேற்ப உப்பு, நறுக்கிய பெரிய வெங்காயம், மிளகாய் துண்டுகள் சீரகம், வேர்க்கடலை பொடி ஆகியவற்றை போட்டு நன்று கலந்து வைக்கவும்.
  • வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு உளுந்த பருப்பை போட்டு கிளறவும். பின்பு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு சிறிது நேரம் தாளித்து பின்பு அதை சூடு தணிந்த பின் கேழ்வரகு மாவில் சேர்த்து கொட்டவும்.
  • பின்பு தேவையான அளவு தண்ணீரை தெளித்து மாவை பிசையவும். தண்ணீரை சற்று கூடுதலாக தெளித்து மாவை பிணைந்து எடுத்து வைக்கவும். சுடுநீரை ஊட்டினால் எளிதில் செய்யலாம்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய வைக்கவும். பின்னர் அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.
  • சப்பாத்திக்கு எடுக்கும் அளவிற்கு மாவை உருண்டையாக எடுத்து தோசைக்கல்லின் நடுவில் வைத்து மாவை அமுக்கி வட்டமாக தட்டவும். பின்னர் தேவைக்கேற்ப நல்லெண்ணெய் ஊற்றி தோசையை மூடி வேக வைக்கவும். பின்னர் சப்பாத்தி போல் இரண்டு புறமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.

சுவையான ராகி அடை ரெடி!

Disclaimer