பாகுபலி பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் உலகமெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே சலார் படம் பிரதாந்த் நீல் இயக்கிய உக்ரம் படத்தின் ரீமேக் என இணையத்தில் தகவல்கள் பரவின. ஏனென்றால் சலார் படத்தின் ட்ரெய்லரை பார்த்தை போது அதில் உக்ரம் படத்தின் சாயல் அதிகமாக இருந்தது.
உக்ரம் திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு கன்னட நடிகர் முரளி நடிப்பில் வெளியானது. அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்ததால் இயக்குநர் பிரசாந்த் நீல் கவலையடைந்தார். இந்த நிலையில் உக்ரம் படத்தின் கதையை மீண்டும் ரசிகர்களுக்குச் சொல்ல விரும்புவதாகப் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பிரசாந்த் நீலிடம் சலார் படம் உக்ரம் படத்தின் ரீமேக்கா என மறைமுகமாக கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த பிரசாந்த் நீல் உக்ரம் படம் திரையரங்களுக்காக உருவாக்கப்பட்டது, அது தோல்வி அடைந்தபோது வருத்தமடைந்தேன். புதிய உலகை உருவாக்குவது போன்ற எண்ணம் எனக்கு கே.ஜி.எஃப்-ல் இருந்து வரவில்லை, உக்ரம் படத்தின் போதே எனக்கு வந்தது.
மேலும் படிங்க Most Googled Tamil Actor : கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர் யார் தெரியுமா ?
உக்ரம் படத்திற்கு நான் நினைத்தது நடக்காதபோது திரையரங்குகளை நிரப்புவதில் தான் கவனம் இருக்க வேண்டும் அதற்காக ஒன்றை செய்ய வேண்டும் என மனப்பூர்வமாக முடிவெடுத்தேன். கே.ஜி.எஃப் படம் நான் எதிர்பார்த்ததை கொடுத்தது. ஆனால் நான் ஆராய வேண்டிய பல விஷயங்கள் பற்றி அறிந்திருந்தேன்.
மேலும் உலகம் பார்த்திடாத அந்த படத்தைத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்று என்னிடமே கூறினேன். அந்த விஷயத்திற்காக நான் திரையரங்குகளை நிரப்ப விரும்பவில்லை. ஆனால் அதை உக்ரம் படத்தின் ரீமேக் என்று அழைப்பதற்கு பதிலாக அந்தக் கதையை மீண்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.
மேலும் படிங்க Best Tamil Movies : 2023ன் டாப் 5 தமிழ் திரைப்படங்கள்
நான் திரையரங்குகளை நிரப்ப விரும்பினேன் அது நிச்சயம் 22ஆம் தேதி நடக்க போகிறது. மக்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம், ஆனால் இறுதியில் உக்ரம் என்னுடைய கதை என பிரசாந்த் நீல் கூறினார். நான் எதையும் நிரூபிக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் அந்த கதைக்காக திரையரங்குகளை நிரப்ப வேண்டும் என்ற ஆழமான லட்சியம் கொண்டு இருந்தேன், அதுவே சலார் திரைப்படம் என பிரசாந்த் நீல் தெரிவித்தார்.
பல விஷயங்களை மாற்றிவிட்டேன். உக்ரம் மற்றும் கே.ஜி.எஃப் படங்களை தாண்டி என்னால் எதையும் சிந்திக்க முடியாது என மக்கள் நினைத்தால் அதைப்பற்றிக் கவலைப்படபோவதில்லை என்றும் சலாரை போலவே உக்ரமும் இரண்டு நண்பர்களை பற்றியது என பிரசாந்த் நீல் உண்மையை உடைத்தார்.
எப்படி இருந்தாலும் சரி ஆதிபுருஷ், சாஹோ படங்களின் தோல்வியால் துவண்டு கிடக்கும் பிரபாஸிற்கு சலார் கம்பேக் படமாக அமைய வேண்டும் என பிரசாந்த் நீலை பிரபாஸ் ரசிகர்கள் மலை போல நம்பியுள்ளனர்.