History of Pongal: தைப்பொங்கலும் அதன் சுவாரஸ்சிய வரலாறும்!.

கலாச்சார மாற்றங்களோடு பயணித்தாலும் இன்னமும் பண்பாடு மாறாமல் கொண்டாடப்படும் பண்டிகைக்குச் சான்றாக உள்ளது தை பொங்கல் தான்.

Jansi Malashree V
Pongal Celebration

தமிழர்களின் பராம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் என அனைத்திற்கும் பெயர் போன பண்டிகை என்றால் அது தை திருநாள். உழவர்களுக்கு மரியாதை, வேளாண் தொழிலுக்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கு மரியாதை என அனைவரையும் பெருமிதப்படுத்தும் சிறப்பான நாளாகவே தொன்று தொட்டு பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

Pongal Festival

தமிழர்களின்பராம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் என அனைத்திற்கும் பெயர் போன பண்டிகை தான் தை திருநாள். உழவர்களுக்கு மரியாதை, வேளாண் தொழிலுக்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கு மரியாதை என அனைவரையும் பெருமிதப்படுத்தும் சிறப்பான நாளாகவே தொன்று தொட்டு பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. 

பொங்கல் தின கொண்டாட்டங்கள்:

மேலும் படிங்க: தித்திக்கும் கரும்புகளோடு கொண்டாடும் தைத்திருநாள்!

நமது வீடுகளில் உள்ள தேவையில்லாத பழைய பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய பொருட்கள் மற்றும் புதிய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாகக் கொண்டாடுவது தான் போகிப்பண்டிகை. மார்கழி மாதத்தின் கடைசி நாள் இந்த கொண்டாட்டங்கள் களைகட்டும். இதுவரை வாழ்க்கையில் இருந்த வேண்டாத விஷயங்களை மறந்துவிட்டு  புதியனவற்றைப் பின்பற்றுவதற்கான சிறந்த நாளாகவும் இது அமைகிறது.

தை முதல் நாளைத் தான் நாம் தை திருநாளாகக் கொண்டாடுகிறோம். உழவுத் தொழிலுக்கு உதவியாக இருக்கும் சூரியனை வழிபடுவதற்கான தினம். நல்ல நேரம் பார்த்து வீட்டு வாசல்களில் பொங்கல் வைப்பதோடு, வழிபடுவார்கள். கோலப்பொங்கல், சூரிய பொங்கல், தை பொங்கல் எனவும் வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என பல பெயர்களில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. 

History of Pongal

உழவுக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளை வழிபடுவற்காகவே தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. முன்பெல்லாம் நம்முடைய முன்னோர்கள் உழவுக்கு உதவிய காளைகளை தங்களுடைய நிலத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அந்த ஒரு நாள் மட்டும் நிலத்தில் எந்த வேலையும் இல்லாமல், கொம்புகளில் வண்ணம் பூசிக் கொண்டு கம்பீரமாக வலம் வரும். உழவுக்கு உதவி செய்த காளைகளைக் குளிப்பாட்டி, உடல் முழுவதும் அழுகுப்படுத்தி, கொம்புகளில் வண்ணம் பூசி, பரிவட்டம் கட்டி பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இது மட்டுமின்றி மாட்டுப் பொங்கல் அன்று கிராமங்களில் பொது மைதானத்தில் மாடுகளை அவிழ்த்து விட்டு விளையாட்டுக் கொள்வார்கள். 

 Mattu pongal history

தை திருநாள் கொண்டாட்டத்தின் மூன்றாவது நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலன்று அக்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் காளைகளும், காளையர்களும் ஒவ்வொருவர் தங்களது வீரத்தைப் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்படுத்துவார்கள்.

பொங்கலுடன் தொடர்புடைய மரபுகள்:

பொங்கல் என்பது வெறும் பண்டிகை மட்டுமில்ல. அறுவடை முடிந்த பின்னர் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுபடுவதற்கான நல்ல வாய்ப்பாகவும் அமைகிறது. தங்களது நிலத்தில் விளைந்த காய்  கறிகள்,நெல், பருப்பு போன்றவற்றை வைத்து வழிபடுகின்றனர். நாம் வைக்கும் அரிசி, பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்து வைக்கப்படும் பொங்கலுக்கே பல சிறப்புகள் உள்ளது. குறிப்பாக அரிசி செழிப்பையும், பருப்பு வலிமையையும், வெல்லம் இனிப்பையும் குறிக்கிறது. இதுப்போன்ற ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வலிமை மற்றும் செழிப்போடு இன்புற்று வாழ வேண்டும் என்பதையும் இந்த பொங்கல் திருநாள் நமக்கு உணர்த்துகிறது.

kanum Pongal

மேலும் அம்மங்காப்புச் செடி, மாவிலை, மஞ்சள், ஆவரம் செடி, வேப்பிலை போன்றவற்றை வீடுகளிலும், தோட்டங்களிலும் வைத்திருப்பதைக் கண்டிருப்பீர்கள்.  இதெல்லாம் தனித்துவம் கொண்ட மூலிகைகள் என்பதால் பழங்காலத்தில் விஷப்பூச்சிகள் தீண்டினாலும் முதலுதவிக்காகக் காப்பு செடிகளைக் கசக்கி சாப்பிட்டு தற்காப்பு செய்துக் கொண்டு பின்னர் முறையான சிகிச்சை மேற்கொள்வார்கள.

இது போன்று தான் தொன்று தொட்டு மருந்திற்காகவும், மங்கலத்தின் அடையாளமாகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். கிராமத்துத் தெருக்கள்  முழுவதும் வண்ணமயமானக் கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நடைபெறும். சில இடங்களில் இத்திருநாளில் குல தெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்வார்கள்.

தற்போது பல கலாச்சார மாற்றங்களோடு நாம் இருந்தாலும், இன்னமும் பண்பாடு மாறாமல் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு முதன்மை சான்றாக தை திருநாள் உள்ளது என்பதை பெருமிதத்தோடு கூறுவோம்.

 

Disclaimer