குழந்தைகளை ஆரோக்கியத்துடனும், நல்ல பண்புகளுடனும் வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் சவாலான விஷயம். ஆனாலும் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் பிரச்சனைகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். உங்கள் குழந்தைகளை மட்டுமல்ல, பெற்றோர்களையும் சமூகம் மரியாதையுடன் நடத்தாது. நாமும் சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியாது. இந்த சூழலைத் தவிர்த்து உங்களது குழந்தைகளை நீங்கள் பொறுப்புடன் வளர்க்க வேண்டும் என்றால், இந்த விஷயங்களையெல்லாம் நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதோ என்னென்ன? என்பது குறித்த முழு விபரம் இங்கே.
குழந்தைகளை வளர்க்கும் முறை:
- ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்க்க வேண்டும். இதற்கு நீங்களும் குழந்தைகள் மீது கட்டாயம் நம்பிக்கை வைப்பது அவசியம். இன்றைய குழந்தைகள் பல திறமைகளோடு இருப்பதால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு அவர்களை நம்பிக்கையுடன் வெளியில் அனுப்பி வைக்கவும். அப்போது அவர்கள் எதன் மீது ஆர்வம் அதிகம் கொண்டுள்ளார்கள்? அவர்களின் விருப்பு வெறுப்புகள் என்ன? என்பதையும் எளிதில் அறிந்து அதற்கேற்றால் போல் செயல்பட முடியும்.
- குழந்தைகளுக்கு சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும், அவர்களுக்கு எப்படி பொறுப்புடன் நடப்பது என்று கற்றுக்கொடுக்க வேண்டும். அநாவசியமாக எதற்கும் செலவு செய்யக்கூடாது. இதோடு வீடுகளை எப்படி சுத்தமாக வைத்திருப்பது, தோட்ட பராமரிப்பு போன்ற அனைத்து விஷயங்களையும் கட்டாயம் மேற்கொள்ள கற்றுக்கொடுக்கவும்.
- குழந்தைகளுக்கு அறிவாற்றல் திறன் அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்கிக் கொடுக்கவும். இது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
- குழந்தைகளைக் கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். அதே சமயத்தில் அவர்களுக்கான சுதந்திரத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் செயல்களில் ஈடுபட அனுமதிக்கவும். மேலும் இக்கட்டான சூழலில் முடிவுகளை எடுக்கவும், அவற்றைக் கையாள்வதற்கான திறனையும் வளர்க்க வேண்டும்.
- பெற்றோர்களில் சிலர் எந்த விஷயத்திலும் நாட்டம் இல்லாமல் ஒருவித சோம்பேறித்தனத்துடன் சுற்றித்திரிவார்கள். இந்த பழக்கத்தை உங்களது குழந்தைகளுக்கு ஒருபோதும் கற்றுக்கொடுத்து விடாதீர்கள். மேலும் எப்போதும் உங்களது குழந்தைகளுக்கு முன்னதாக பாசிட்டிவ்வான விஷயங்களை மட்டும் கற்றுக்கொடுக்க முயற்சி செய்யவும்.
- குழந்தைகள் முன்னதாக உங்களது சோகத்தைக் காட்டிக்கொள்ளக்கூடாது. தேவையான இடத்தில் காட்டிக்கொள்ளலாம். மாறாக எப்போதும் மன வருத்தத்துடன் இருந்தால் அவர்களின் படிப்பு மற்றும் மனநிலையை பாதிக்கும் என்பதால் மன வருத்தத்தைக் காட்டிக் கொள்ளக்கூடாது.
இதுபோன்ற முறைகளை நீங்கள் உங்களது கற்றுக்கொடுக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் வாழ்க்கையில் எந்த இடையூறு வந்தாலும் தகர்ந்தெறிந்து முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
மேலும் படிங்க: சிறந்த பெற்றோராக இருக்க வேண்டுமா? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை தான்!
Image Source - Freepik