தங்களது அன்பைப் பரிமாற்றுக்கொள்ளும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. உங்கள் காதலன்,காதலி அல்லது மனைவியிடம் உங்களது அன்பை வெளிப்படுத்தும் நாளில், உங்களது துணைக்கு மறக்க முடியாத பரிசு பொருள்கள் ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற திட்டம் நிச்சயம் இருக்கும்.முன்பை விட இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே காதலர் தின கொண்டாட்டம் பெரும் புகழ் பெற்றுள்ளது. ஒவ்வொரு காதலர்களும் தங்கள் வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்த காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் பல வழிகளைத் தேடுகின்றனர்.
நீங்கள் கேரளாவில் காதலர் தினத்தைக் கொண்டாட திட்டமிட்டிருந்தால், இந்த கட்டுரையில் உங்கள் துணையுடன் மறக்க முடியாத காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்கான சிறந்த அழகான இடங்களைப் பற்றி நாங்கள் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறோம்.
மேலும் படிங்க: சென்னை மாநகரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்!
கேரளாவில் காதலர் தினக் கொண்டாட்டங்கள்:
கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளத்தில் திரும்பி பார்க்கும் இடங்களெல்லாம் சுற்றுலா தலங்கள். இங்கு பச்சைப்புலிவெளிகள், கடற்கரைகள். மலைவாசஸ்தலங்கள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான பள்ளத்தாக்குகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அதிலும் காதலர்கள் கொண்டாடும் வகையில் பல இடங்களும் இங்கே அமைந்துள்ளதால் கூடுதல் சிறப்பு வாய்ந்த மாநிலமாக திகழ்கிறது கேரளா.
மூணாறு:
காதலை இயற்கையோடு வெளிப்படுத்த ஏற்ற இடம் மூணாறு. அமைதியான சூழல், விண்மீன்கள் நிறைந்த வானம் மற்றும் மெழுவர்த்தி வெளிச்சத்தில் உங்களது காதலை இயற்கையோடு பரிமாறிக்கொள்ளும் இடங்களில் ஒன்று மூணாறு. இதோடு இங்கு செல்பி எடுப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ள தேயிலை தோட்டங்கள், இரவிகுளம் தேசிய பூங்கா, மாட்டுப்பட்டி இந்தோ, பூபாறை என பல இடங்கள் அமைந்துள்ளது. உங்களின் காதலின் ஆழத்தை பல்லாயிரம் ஆயிரம் அடி உயரம் உள்ள மலைவாசஸ்தலத்திலிருந்து பகிர வேண்டும் என்றால் கொஞ்சம் மூணாறு பக்கம் வரலாம்.
ஆலப்புழா:
உங்கள் மனைவி மற்றும் காதலியுடன் காதலர் தினத்தைக் கொண்டாட மற்றொரு சிறந்த இடம் ஆலப்புழா. எப்போதும் பிஸியான வேலை மற்றும் நகர வாழ்க்கையில் சலசலப்பு எதுவும் இல்லாமல் காதலை மட்டும் கொண்டாட திட்டம் இருந்தால் ஆலப்புழா உங்களுக்கு சிறந்த தேர்வு. பேக் வாட்டர் அதாவது கேரளா உப்பங்கழிகள் அமைந்துள்ள படகு இல்லம், காதல் பயணத்திற்கு ஏற்றது. இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு மத்தியில் ஒரு ஆடம்பர படகு பயணம் உங்கள் துணைக்கு காதலர் தினத்தில் சிறந்த பரிசாக அமையும். இதோடு இங்கு குட்டநாடு காயல், ஆலப்புழை கடற்கரை, மாராரி கடற்கரை, ரேவி கருணாகரன் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
கொச்சி:
இயற்கைக்கு அப்பாற்பட்டு கொஞ்சம் வித்தியாசமாக காதலர் தினத்தைக் கொண்டாட திட்டமிடும் நபர்களள் கொச்சி செல்லலாம். கடற்கரை நகரமான கொச்சயில், ஃபோர்ட் கொச்சி, யூதர் நகரம், செராய் கடற்கரை, மட்டஞ்சேரி அரண்மனை, வில்லிங்டன் தீவு என பல இடங்கள் அமைந்துள்ளது. வித்தியாசமாக அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும்.
மேலும் படிங்க: தமிழ்நாட்டில் காதலர்களுக்காகவே உள்ள தேனிலவு இடங்கள் இதோ!
இதே போன்று காதலியின் கரம் பிடித்து நடப்பதற்கு ஏற்ற கடற்கரைகள் கொண்டது கோவளம். அன்புக்குரியவர்களிடம் கடற்கரையில் விளையாடி காதலர் தினத்தைக் கொண்டாடலாம். மேலும் இயற்கை மற்றும் வன விலங்கு ஆர்வம் காதலர்களாக நீங்கள் இருந்தால் தேக்கடி சென்று வரவும். தேக்கடி பெரியார் வன விலங்கு சரணாலயத்திற்குள் சவாரி உள்ளது.
காதலிக்கும் இருவர்களுக்கு மட்டுமல்ல, தன்னுடைய மனைவியுடன் அன்பைப் பரிமாறிக்கொள்ள நினைக்கும் ஒவ்வொரு கணவர்களும் காதலர் தினத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Image Credit: Google