மாங்காய் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? பச்சை மாங்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இன்றும் பலருக்கு உண்டு. இதை சொல்லும்போதே நாவில் எச்சில் ஊரும். மாங்காய் மற்றும் மாம்பழம் எவ்வளவு அதிகமாக சாப்பிட்டாலும் அதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும். பச்சை மாங்காய் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு எளிய முறையில் இந்த சத்தான சுவையான மாங்காய் சாதம் செய்து கொடுக்கலாம்.
மாங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
- ஒரு கப் வடித்த சாதம்
- ஒரு மாங்காய்
- ஒரு வெங்காயம்
- நான்கு பச்சை மிளகாய்
- கால் டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள்
- எண்ணெய் தேவையான அளவு
- கடுகு
- கடலைப்பருப்பு
- உளுத்தம் பருப்பு
- ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரிப்பருப்பு
- நான்கு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- உப்பு தேவையான அளவு.
சுவையான மாங்காய் சாதம் செய்முறை:
- மாங்காயை தண்ணீரில் நன்றாக கழுவி சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது மாங்காயை துருவி எடுத்து கொள்ளலாம்.
- கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
- இப்போது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- இதனை அடுத்து மாங்காய் துண்டுகள் அல்லது மாங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இப்போது தேங்காய் துருவல் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கிளறி வர வேண்டும்.
- இதில் வடித்து வைத்த உதிரியான சாதத்தை கலந்து பரிமாறினால் குழந்தைகளுக்கு பிடித்த சுவையான மாங்காய் சாதம் ரெடி.
மாங்காயில் உள்ள நன்மைகள்:
நம் தினசரி உணவில் மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மாங்காயில் உள்ள வைட்டமின் சி சத்து ரத்த நாளங்களின் நீட்சித் தன்மையை அதிகரிப்பதால் ரத்தத்திற்கு நல்லது. மேலும் மாங்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலின் நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளதால் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.
மேலும் படிக்க: சுவையான கொத்து சப்பாத்தி ரெசிபி டிப்ஸ்!
அதேபோல சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மாங்காய் உதவுகிறது. இதனால் மாங்காய் ஒரு சிறந்த உணவு பொருளாக கருதப்படுகிறது. இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, போன்ற உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது.
Image source: google