மகர சங்கராந்தி என்பது இந்துக்களின் அறுவடைத் திருவிழாவாகும். இது ஜனவரி மாதத்தில் இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. சங்கராந்தி என்றால் இயக்கம் என்று பொருள். நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உணர்வுப்பூர்வமாக வடிவமைக்க வேண்டும் என்பதை இந்தப் பண்டிகை உணர்த்துகிறது.
லோஹ்ரிக்கு அடுத்த நாள் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அனைவரும் மகர சங்கராந்தி கொண்டாட இருக்கிறோம்.
வரலாறு
ஒரு நபர் மகர சங்கராந்தி அன்று உயிரிழந்தால் அவர் நேரடியாகச் சொர்க்கத்திற்கு செல்வார் என்று நம்பப்படுகிறது. புராணங்களின்படி மகர சங்கராந்தியின் அடுத்த நாளில் சங்கராசுரன் என்ற அரக்கனை சங்கராந்தி என்ற இந்து தெய்வம் கொன்றதாகக் கூறப்படுகிறது. அந்த நாள் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் பாரம்பரியங்களை பின்பற்றி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது
கொண்டாட்டங்கள்
மகர சங்கராந்தி கொண்டாடப்படும் பகுதிகளையும், மாநிலங்களையும் பொறுத்து பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வட இந்திய இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தப் பண்டிகயை மகி என்று குறிப்பிடுகின்றனர். லோஹ்ரிக்கு அடுத்த நாள் மகி கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளத்தில் இந்த பண்டிகை பெளஷ் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.
ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மகர சங்கராந்தி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மத்திய இந்தியாவில் இதை சுகரத் என்றும் அசாமில் மாக் பிஹூ அல்லது போகாலி என்றும் அழைக்கப்படுகிறது. பிஹூ என்றால் உண்ணும் உணவு இன்பம் என்று அர்த்தம்.
கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் கிச்சடி எனவும் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணன் என்றும் மகர சங்கராந்தி அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாரம்பரியமாக தைப் பொங்கல் எனக் கூறுகிறோம்.
கொண்டாட்ட முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் இந்தப் பண்டிகையையொட்டி அனைத்து மாநிலங்களிலும் ரேக்ளா, ஜல்லிக்கட்டு, கம்பளா போன்ற போட்டிகள் நடத்தப்படும். மகர சங்கராந்தியின் போது மக்கள் சூரிய கடவுளை வணங்குவார்கள். அதற்கு முன் நீர்நிலைகளில் புனித நீராடிவார்கள். அதன் பிறகு எள் மற்றும் வெல்லத்தால் இனிப்புகள் தயாரித்து அதை கால்நடைகளுக்கு படையிலிடுவது உண்டு. சிலர் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்வார்கள். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் நல்ல விளைச்சல் வேண்டி கடவுளை வணங்குவார்கள்.
திருவிழாவின் போது, மக்கள் சூரிய கடவுளை வணங்குகிறார்கள், புனித நீர்நிலைகளில் புனித நீராடுகிறார்கள், ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்து, காத்தாடிகளை பறக்கவிட்டு, எள் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகளைத் தயாரித்து, கால்நடைகளை வணங்குகிறார்கள். மேலும், இந்தியா முழுவதும் விவசாயிகள் நல்ல விளைச்சல் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.
குஜராத் மாநிலத்தில் மட்டும் மகர சங்கராந்தி கொண்டாட்டங்களில் சில வித்தியாசம் இருக்கும். வானத்தில் பட்டம் விட்டு அனைவரும் பெருமகிழ்ச்சி அடைவார்கள். 1989ஆம் ஆண்டு முதல் பட்டம் விட்டு கொண்டாடி வருவதால் அன்றைய தினம் சர்வதேச பட்டம் விடும் தினம் என்றும் கூறப்படுகிறது.