பாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கும் உணவுகளுக்கு பெரும்பாலான மக்கள் அடிமையாகி விட்டாலும் சமீப காலமாக சில மக்கள் பாரம்பரிய உணவுகள் மீது அதிகளவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக நம்மிடம் இருந்து விட்டு போன நல்ல பழக்கத்தை மீண்டும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். அது என்னவென்றால் பழைய சாதம்.
அந்தக் காலத்தில் வசதி இல்லாதவர்கள் இரவு நேரத்தில் மீதம் இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் அதை குழம்பு ஊற்றியோ அல்லது மோர் ஊற்றியோ உப்பு போட்டு வெங்காயம் அல்லது பச்சை மிளகாயை கடித்து சாப்பிடுவார்கள். இது தான் பழைய சாதத்தின் உருவாக்கம். காலங்காலமாகப் மக்களின் உணவுப்பழக்கத்தில் பழைய சாதம் இருந்தது.
ஆனால் குளிர்பதன பெட்டி வந்துவிட்ட பிறகு நேற்று மீதிய உணவை அப்படியே உள்ளே வைத்து மறுநாள் அதை சூடுபடுத்தி சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் பழைய சாதத்திற்கான தேவை இல்லாமல் போய்விட்டது. குளிர்பதன பெட்டியின் பயன்பாடு பெருக பெருக பழைய சாதம் ஏழை மக்கள் சாப்பிடும் உணவு, கிராமத்தில் மட்டுமே பழைய சாதம் சாப்பிடப்படும் என்ற தவறான நம்பிக்கை வந்துவிட்டது. இதன் விளைவாக பழைய சாதம் சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது.
மீந்து போன சாதத்தை தண்ணீரில் ஊற்றி வைக்கும் போது லாக்டோபாசிலஸ் என்ற பாக்டீரியா உற்பத்தி ஆகி நொதித்தல் செய்முறை நடந்து புரோபயாட்டிக் உணவாக மாறுவது தான் பழைய சாதம். தயிர், மோர் போல இயற்கையாக கிடைக்ககூடிய புரோபயாட்டிக் உணவுகளில் பழைய சோறும் ஒன்றாகும். காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் உங்கள் குடல் குளிர்ச்சியடையும்.
மேலும் படிங்க எலும்பு சூப் குடிக்க வேண்டியதன் அவசியம் தெரியுமா?
பழைய சோறு நன்மைகள்
- வயிறு சம்மந்தமான பிரச்சினை உள்ளவர்கள் பழைய சோறு சாப்பிடுவது மிகவும் நல்லது.
- இதில் வைட்டமின் கே, வைட்டமின் பி காம் காம்பெளக்ஸ் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
- சாதா சாதத்தை விட பழைய சாதத்தில் உள்ள சத்துகளை நமது உடல் எளிதில் உறிஞ்சுகிறது.
- பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் அதிகம் உள்ளன.
- மோர் மற்றும் தயிர் புரோபயாட்டிக் உணவாக உள்ள நிலையில் இவற்றுடன் பழைய சோற்றை சேர்த்து சாப்பிடும் போது அது சூப்பர் புரோபயாட்டிக் உணவாக மாறுகிறது. வயல் வேலைக்கு செல்லும் பலர் இன்றும் கூட பழைய சோறு எடுத்து செல்வதை நம்மால் பார்க்க முடியும்.
- நாம் சாதாரணமாக வடித்து சாப்பிடும் உணவில் உள்ள மாவுச் சத்து தான் பழைய சாதத்திலும் உள்ளது.
இது போன்ற ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகளுக்கு ஜெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.