கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய உன்னத நிகழ்வு. தன்னுடைய கருறையில் குழந்தைகளை சுமக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் இருந்தாலும், கருவுற்ற நாளிலிருந்து 3 முதல் மாதங்களுக்கு பல இன்னல்களும் உடன் சேர்ந்துவிடும். இதனால் தான் ஒரு பெண்கள் கருவுற்றிருந்தால், 3 மாதங்களுக்கு மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.
ஆம் கருவுற்ற நாளிலிருந்து பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல மாற்றங்களை அவர்கள் சந்திக்கின்றனர். அவை என்னென்ன? பிரச்சனையிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிங்க: குளிர்கால உடல் எடை குறைப்பிற்கு உதவும் கீரை!
கர்ப்பிணிகளும் முதல் 3 மாதங்களும்:
- பெண்கள் கருவுற்றவுடன் வாந்தி, மயக்கம், ஒவ்வாமை,தலைசுற்றல், அடிவயிறு வலி, தசைபிடிப்பு போன்றவை ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் சில பெண்களுக்கு கர்ப்பம் தரித்த நாள் முதல் தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படக்கூடும். சில நேரங்களில் அவர்களால் எழுந்திருக்கக்கூட முடியாத நிலை ஏற்படக்கூடும். இந்த நிலை இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.
- முதல் 3 மாதங்களுக்கு வழக்கத்திற்கு மாறாக ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் என்பதால், இந்நேரத்தில் நாம் எதையும் சாப்பிட முடியாது. பிடித்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் வெறுப்பாகத் தான் இருக்கும். ஆனாலும் இந்நேரத்தில் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. இது குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கும். எனவே சாப்பிட முடியவில்லை என்றாலும், ஜூஸ், கஞ்சி, கூழ் போன்ற திரவ உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- கர்ப்ப காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும் என்பதால்,சளி,இருமல்,காய்ச்சல் போன்ற தொற்றுகள் ஏற்படக்கூடும். இதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் பல மாற்றங்கள் உண்டாகும். எனவே தொற்றுக்கிருமிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
- கருப்பையில் கருவளர்ச்சி நடைபெறும் முக்கியமான காலமாக முதல் 3 மாதங்கள் உள்ளது. எனவே முடிந்தவரை கடினமான வேலைகளைச் செய்யாதீர்கள். 85 சதவீத பேருக்கு முதல் 3 மாதங்களில் கருச்சிதைவு அதிகமாக இருக்கும் என்பதால் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும்.
- தாய் சந்தோஷமாக இருந்தால் தான், வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியிலும் எவ்வித பாதிப்பும் இருக்காது. எனவே முடிந்தவரை கர்ப்பிணிகள் உங்களை சந்தோஷமாக வைத்திருக்க முயற்சி செய்யவும்.
- பொதுவாக கர்ப்ப காலத்தில் மாதவிடாய் வராது. ஆனால் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் சிறுநீருடன் ரத்தம் வெளியேறும். இதுப்போன்ற நேரத்தில் உடனடியாக மருத்துவ பரிசொதனை செய்துக்கொள்ளவும்.
- கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு முதல் 3 மாதங்களில் தான் முக்கிய உடல் உறுப்புகள் வளரக்கூடும். எனவே அதற்கேற்றால் போல் ஊட்டச்சத்துள்ள உணவுகளை கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிங்க: ஒளிரும் முக பளபளப்பிற்கு உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்!