பெண்கள் மனதளவில் பெரும் சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய நிகழ்வு என்றால் கர்ப்ப காலத்தைத் தவிர வேறொன்றுமில்லை. 9 மாதங்கள் கருவில் உள் குழந்தைகளை அரவணைக்கும் ஒவ்வொரு தாய்மார்களும் போற்றப்படக்கூடியவர்கள். உடலில் பல ஹார்மோன்கள் வந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் கருவில் உள்ள குழந்தைகளுக்காக வாழ்கிறார்கள் ஒவ்வொரு தாய்மார்களும். இவ்வாறு மகப்பேறுக்கு முற்பட்ட கவனிப்பைப் பெறுவது ஆரோக்கியமான குழந்தையைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்கள் எந்தளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறீர்களோ? அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதோடு, குழந்தைகள் சீக்கிரமாக (Pre term baby) பிறக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. இன்றைக்கு பெண்களாகிய நாம் கர்ப்ப காலத்தில் பாதுகாப்புடன் இருக்க என்ன செய்ய வேண்டும்? எப்படியெல்லாம் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
கர்ப்ப கால ஆரோக்கிய குறிப்புகள்:
பெண்களாகிய நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று தெரிந்தவுடன் முதலில் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு விதமான உடல் வாகு இருக்கும். கர்ப்பத்தைத் தாங்கும் அளவிற்கு சிலரது உடல் நலம் இருக்காது என்பதால் இந்நேரத்தில் கட்டாயம் மருத்துவர்களின் ஆலோசனைத் தேவை. மருத்துவர்களின் அறிவுரையின் படி முதல் 3 மாதங்களுக்கு அதிக வேலை எதையும் செய்யக்கூடாது.மேலும் முதல் மாதங்களுக்கு கூடுதல் கலோரிகள் தேவையில்லை. இருந்தாலும் உடல் சோர்வாகத அளவிற்கு உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
பின்னர் இரண்டாவது மூன்று மாதங்கள் அதாவது 13 முதல் 26 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 340 கூடுதல் கலோரிகள் தேவைப்படும் என்பதை நினைவில் வைத்து அதற்கேற்ப ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதே போன்று கடைசி மூன்று மாதங்களுக்கு அதாவது 26 வாரங்களுக்குப் பிறகு கர்ப்பிணிகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 450 கூடுதல் கலோரிகள் தேவை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. கர்ப்ப காலத்தில் எக்காரணம் கொண்டும் தினமும் காலை உணவுகளை நிறுத்தக்கூடாது. மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும் என்றால், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் உணவுமுறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்கு வேகவைக்கப்படாத மீன்கள், இறைச்சிகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிங்க: எலும்புகளை வலுப்படுத்தும் ஆரோக்கிய பானங்கள்!
கர்ப்ப காலத்தில் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பதைத் தெரிந்து கொள்ளும் விதமாக 5 மாதத்தில் ஸ்கேன் எடுக்க வேண்டும். மாத மாதம் முறையான மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும். இது போன்ற நடைமுறைகளைக் கர்ப்பிணிகள் பின்பற்றினாலே கர்ப்ப காலத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ஆரோக்கியமாக குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்.
Image Credit: Google