கார்கூந்தல் பெண்களுக்கு தனி அழகு. ஆனால் இன்றைக்கு இடுப்பளவிற்கு தலைமுடி கொண்ட பெண்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. மாடர்ன் கலாச்சாரம் என்கிற பெயரில் ஸ்டெப் கட், லேயர் கட், யு கட், வி கட் என விதவிதமாக தலைமுடியை அழகாக்குவதால் தலைமுடியின் உயரம் குறைந்துவிடுகிறது. மேலும் தலைமுடி அதிக சென்சிடிவ் பண்புகளைக் கொண்டுள்ளதால் தூசி, பருவ நிலை மாற்றம் போன்ற பல காரணங்களில் முடி வலுவிழந்து கொட்டவும் ஆரம்பிக்கிறது. இதே நிலை நீடிக்கும் போது முடியின் வளர்ச்சி குறைகிறது. இதோ இன்றைக்கு முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய பழங்கள் என்னென்ன? என்ற விபரங்கள் இங்கே.
முடி வளர்ச்சிக்கு உதவும் பழங்கள்:
மேலும் படிங்க: பெண்களின் கண்களை அழகாக்கும் கண் இமை.. வீட்டிலேயே தயார் செய்யலாம்!
- சிட்ரஸ் பழங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சைப் பழங்களில் அதிக வைட்டமின் சி உள்ளது. இவற்றை உணவு முறையில் சேர்த்துக்கொள்ளும் போது உடலுக்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதோடு, முடி வலிமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- பெர்ரி: ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த புளுபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிகளில் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் தலைமுடியின் வேர் வரை சென்று முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- அவகோடா: வெண்ணெய் பழங்கள் என்றழைக்கப்படும் அவகோடாவில் உள்ள வைட்டமின் ஈ இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- வாழைப்பழங்கள்: பொட்டாசியம், வைட்டமின்கள் உள்ளிட்ட அத்தியாவசி ஊட்டச்சத்துகள் கொண்டுள்ள வாழைப்பழங்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைமுடியின் வேர்கள் வரை ஊட்டச்சத்துகள் பெறுவதற்கு உதவுவதோடு முடி கொட்டுவதைத் தடுக்கிறது.
- பப்பாளி: முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் பப்பாளியில் உள்ளது. இவற்றை தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மற்றும் உடலுக்குத் தேவையான என்சைம்களும் அதிகரிக்கிறது.
- அன்னாசிப்பழம்: வைட்டமின் சி மற்றும் ப்ரோமைலைன் கொண்ட அன்னாசிப்பழம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் தலைமுடியின் வேர்கள் வரை சரியான ஊட்டச்சத்து விநியோகத்தை உறுதிசெய்து, முடி அடர்த்தியை அதிகரிக்கிறது.
- மாதுளை: மாதுளையில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடியை வலுப்படுத்துகிறது. பெண்களுக்கு அடர்த்தியான கூந்தலையும் வழங்குகிறது.
- கிவி: முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய மற்றொரு ஊட்டச்சத்துள்ள பழங்களில் ஒன்று தான் கிவி. வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஏராளமாக இருப்பது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் தனித்துவமான நன்மைகளையும் வழங்குகிறது. கிவியில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளடக்கம் இருப்பதால் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் முடி உதிர்வதை தடுக்கிறது.
Image Credit: Google