Udupi Sambar : கர்நாடகா ஃபேமஸ் உடுப்பி சாம்பார் செய்முறை

உங்களிடம் 30 நிமிடம் இருந்தால் கர்நாடக ஃபேமஸ் உடுப்பி சாம்பார் தயாரித்துவிடலாம்.

Raja Balaji
udupi sambar ingredients

ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போவது கர்நாடகா ஃபேமஸ் உடுப்பி சாம்பார். இது வழக்கமான சாம்பாரை விட வித்தியாசமான சாம்பாராகும். பருப்பு இன்றி தேங்காயை வைத்து உடுப்பி சாம்பார் தயாரிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் உடுப்பி நகரில் உள்ள பிரபலமான கோயில் ஆயிரக்கணக்கானோரு உடுப்பி சாம்பார் உணவுடன் சேர்த்து தரப்படும்.

இந்த உடுப்பி சாம்பாரை இரண்டு மூன்று காய்கறிகளை கொண்டு செய்யலாம். வெள்ளை பூசணிக்காய் உடுப்பி சாம்பார் செய்வதற்கு உகந்ததாகும். வாழைக்காய், பிஞ்சு பலாப்பழம் ஆகியவற்றை பயன்படுத்தியும் இந்த சாம்பாரை தயாரிக்கலாம். வாழைக்காய் பயன்படுத்தினால் அது உருளைக்கிழங்கு மாவு போல ஆகிவிடும். பூசணிக்காய் பயன்படுத்தி செய்வதே கர்நாடகாவில் பிரபலமான ஸ்டைலாகும்.

உடுப்பி சாம்பார் செய்யத் தேவையானவை

  • வெள்ளை பூசணிக்காய்
  • காய்ந்த மிளகாய்
  • தனியா
  • தேங்காய்
  • சீரகம்
  • தண்ணீர்
  • கடுகு
  • உப்பு
  • புளி தண்ணீர்
  • கறிவேப்பிலை

கவனம் கொள்க

முதலில் 12 காய்ந்த மிளகாய், ஆறு ஸ்பூன் தனியா, ஒன்றை மூடி துருவிய தேங்காய், இரண்டு ஸ்பூன் ஜீரகம் என அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல அரைக்கவும். கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம்.

உடுப்பி சாம்பார் செய்முறை

  • கடாயில் சாம்பாருக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு பத்து கிராம் கடுகு போடவும்.
  • கடுகு பொரிந்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். தற்போது அரை கிலோ வெள்ளை பூசணியை சிறிது சிறிதாக வெட்டி கடாயில் போடுங்கள்.
  • கொஞ்சம் கிளறிவிட்டு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மூடிவிடுங்கள் பத்து நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வெள்ளை பூசணி வேக வேண்டும்.
  • முக்கால் வாசி வெந்தவுடன் சாம்பாருக்கு தேவையான புளி தண்ணீர் சேர்க்கவும்.
  • தற்போது 100 கிராம் வெல்லத்தை பொடிதாக்கி பூசணியுடன் சேர்த்து கிளறி விடவும்.
  • இதை செய்வதற்கு முன்பாக உப்பு சேர்க்க கூடாது. ஏனென்றால் உப்பு புளி போட்ட பிறகு காய்கறிகள் வேகாது. எனவே பெரும்பாலான சமையல்களில் உப்பு கடைசியாக சேர்க்கவும்.
  • தற்போது அரைத்த மசாலா மற்றும் உப்பு தேவையான அளவு சாம்பாரில் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள்.
  • ஐந்தே நிமிடங்களில் சூடான சுவையான ஃபேமஸ் உடுப்பி சாம்பார் தயாராகி விடும்.
  • சாதத்தில் ஊற்றி சாப்பிடவும், தோசை, இட்லி, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடவும் இந்த சாம்பார் அருமையாக இருக்கும்.
  • விருப்பபட்டால் நீங்கள் உடுப்பி சாம்பாரை குடிக்கவும் செய்யலாம்.

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer