தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமைகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.அந்த வகையில் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்கள் ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை, முடக்கறுத்தான் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஜனவரி 26ம் தேதி லோக்கல் சரக்கு, த.நா, நியதி ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இம்மாத இறுதியில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் லோ பட்ஜெட் படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வார தியேட்டர் ரிலீஸ்
ப்ளூஸ்டார்
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, பிருத்திவிராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.
சிங்கப்பூர் சலூன்
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஷிவானி ராஜசேகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், ஜான் விஜய், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா ஆகியோர் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளனர். வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.
தூக்குதுரை
தமிழ் திரையரவையில் முன்னணி நகைச்சுவை மற்றும் நடிகரான யோகி பாபு இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். மேலும் இனியா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.
முடக்கறுத்தான்
பிரபல சித்த மருத்துவரான கே.வீரபாபு இப்படத்தை இயக்கிய தயாரித்து இசையமைத்து நடித்துள்ளார். இப்ப படத்தில் சமுத்திரகனி, சூப்பர் சுப்புராயன், மஹானா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லோக்கல் சரக்கு
எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார். இதில் சிறப்பு வேடத்தில் யோகி பாபு, நாயகியாக உபாசனா ஆர்சி நடித்துள்ளார். மேலும் இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, வையாபுரி, சென்ட்ராயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நியதி
இயக்குனர் நவீன் குமார் இயக்கிய நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சனா பாபு, கோவிந்த மூர்த்தி, கோபிகா, சுரேஷ், தேனி முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.இப்படம் ஆக்சன் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. ஜாக் வாரியர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள்
பேட்லேண்ட் ஹண்டர்ஸ், அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம், நேரு, ஏஜென்ட், அனிமல், கர்மா காலிங், சாம் பகதூர், பைட் கிளப், ஹஸ்ட்லர்ஸ் ஜூகாத் கா கேல், போன்ற படங்கள் இந்த வாரம்ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படங்களில் அனிமல் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது.
அனிமல்
பாலிவுட் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 1ம் தேதி இந்தி,தெலுங்கு, கன்னடம்,தமிழ்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பல்வேறு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 26ம் தேதி நெட்பிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.