Healthy Morning Habits : ஆரோக்கியமான காலை பழக்கத்தை எப்படி தொடங்குவது?

ஆரோக்கியமான காலை பழக்கத்தை பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடலில் உற்பத்தி திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சியாக வாழலாம். அதற்கான சரியான திட்டங்கள் மற்றும் வழிமுறைகளை நாங்கள் தருகிறோம்!

S MuthuKrishnan
morning wake

ஒவ்வொரு காலையிலும் நீங்கள் தொடங்கும் விதம் உங்கள் நாள் முழுவதும் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமான காலை பழக்கத்தை பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடலில் உற்பத்தி திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சியாக வாழலாம். அதற்கான சரியான திட்டங்கள் மற்றும் வழிமுறைகளை நாங்கள் தருகிறோம்.

உங்களின் ஆரோக்கியமான மகிழ்ச்சியான நாளை தொடங்குவது எப்படி?

lady wake up

உங்களுக்கான அலாரத்தை செட் செய்யவும்

உங்களுக்காகவும் உங்கள் பொறுப்புகளுக்காகவும் காலையில் உங்களுக்கு போதுமான நேரம் இருப்பதை உறுதி செய்ய அலாரம் வைத்து காலை கண் விழியுங்கள். அதுதான் அன்றைய நாளை சரியாக தொடங்குவதற்கான முதல் படி ஆகும்.

உங்களின் புதிய நாளில் சுவாசிக்கவும்

காலை எழுந்ததும் நல்ல எண்ணங்களை மனதில் நினைத்துக் கொண்டு சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் மீது இயற்கை வெளிச்சம் படும் இடத்தில் நின்று 10 நிமிடம் சுவாசப் பயிற்சி செய்யவும். சுவாசம் உங்கள் மனதை நேர்மறையாக ஒழுங்குபடுத்த உதவும்.

காபிக்கு முன் தண்ணீர் குடிக்கவும்

தினமும் இரவில் நாம் தூங்கும் போது சுவாசம் மற்றும் வியர்வை வழியாக உடலில் உள்ள தண்ணீரை இழப்பதால், காலையில் பொதுவாக நாம் தாகத்துடன் எழுந்திருப்போம். எனவே எழுந்ததும் முதல் வேலையாக போதும் என்ற அளவிற்கு தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.

உடலை பாதுகாக்க உடற்பயிற்சி

இரவில் நாம் தூங்குவதற்கு காட்டும் வேகத்தை காலை எழுந்ததும் உடற்பயிற்சியில் காட்டினால் உடலும் மனதும் ஆரோக்கியப்படும். முடிந்த அளவு உடலின் எல்லா பகுதிகளையும் அசைத்து சிறிது தூரம் நடக்கவும் அல்லது ஓடவும். சிறந்த காலைப்பழக்கத்திற்கு உடற்பயிற்சி மிக முக்கியம்.

அவசரம் இல்லாமல் குளிக்கவும்

சரியான வழிமுறைகளை பின்பற்றி, சரியான நேரத்தில் எழுந்து பிடித்த இசை அல்லது பாடல்களை கேட்டு காலைக்கடன்களை முடிக்கச் செல்லவும். அவசரம் இல்லாமல் காலைக்கடன்களை முடிக்க கற்றுக் கொள்ளவும். குறிப்பாக, உங்கள் காலைக்கடன்களை சரியாக முடிக்க தேவைப்படும் நேரத்திற்கு முன்பாக எழுந்து,  அவசரம் இல்லாமல் பல் துலக்கி, குளித்து  புன்னகையோடு உங்கள் அன்றாட பணிக்கு செல்லுங்கள்.

பின் வாங்காமல் கடைபிடிக்கவும்

ஒவ்வொரு காலையிலும் நீங்கள் தொடங்கும் விதம் உங்கள் நாள் முழுவதும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியோடு கடந்து செல்ல உதவும். எனவே சரியான காலை பழக்க திட்டங்களை ஒருபோதும் பின்வாங்காமல் தினசரி தொடருங்கள்.

வெற்றிக்காக உங்களை அமைத்துக் கொள்ளுங்கள்

காலையில் முன்னதாக எழுந்திருப்பது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். நம்பிக்கையை மனதில் வைத்து சரியான நேரத்தில் தூங்கி காலையில் ஆரோக்கியமாக எழுந்து வெற்றியை தேடிச்செல்ல உங்களை சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் புதிய ஆரோக்கியமான காலை பழக்கத்தை தொடங்க நீங்கள் தயாரா? நாளை காலை உங்கள் நாளாக இருக்க வாழ்த்துகிறோம்.

Disclaimer