ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போவது பீனட் பட்டர். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு என்று நாம் அனைவரும் அறிந்ததே. ரொட்டியில் தடவி சாப்பிடுவதற்கும் சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடுவதற்கும் அற்புதமாக இருக்கும். காலை வேளையில் ரொட்டியில் இதை தடவி சாப்பிட்டால் உங்களுக்கு பசிக்கவும் செய்யாது. பீனட் பட்டர் செய்வதற்கு சமையலறையில் மூன்று நான்கு பொருட்கள் இருந்தால் போதும். இதில் நாம் எந்த ரசாயனமும் சேர்க்கவில்லை. இயற்கையான முறையில் தயாரிக்கிறோம்.
பீனட் பட்டர் செய்யத் தேவையானவை
- வறுத்த வேர்க்கடலை
- எண்ணெய்
- தேன்
- உப்பு
- வெல்லம்
- கோ கோ பவுடர்
பீனட் பட்டர் செய்முறை
- பீனட் பட்டர் செய்வதற்கு தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலையை 200 கிராம் அளவிற்கு மிக்ஸியில் போட்டு அரையுங்கள்.
- இந்த செய்முறையில் நாம் எங்கும் தண்ணீர் சேர்க்கப்போவதில்லை. இதில் கவனமாக இருங்கள்.
- ரொம்பவும் அரைத்துவிட வேண்டாம். இதை அப்படியே தனியாக வைத்திருங்கள். கடைசியில் சேர்க்கும் போது மொறுமொறுப்பான உணர்வு கிடைக்கும்.
- வேறொரு ஜாரில் தோல் நீக்கிய 400 வறுத்த கிராம் வேர்க்கடலையை ஸ்மூத்தாக அரைக்கவும்
- ஒரு ஸ்பூன் எண்ணெய் மட்டுமே சேர்க்கவும். ஏனென்றால் வேர்க்கடலையை அரைக்கும் போது அதிலிருந்தே எண்ணெய் பிரிந்து வரும்.
- ஒரு டீஸ்பூன் தேன் ஊற்றவும். அதற்கு மேல் வேண்டாம். தேன் அதிகமாக சேர்த்தால் பீனட் பட்டர் கெட்டியாகிவிடும்.
- இதன் பிறகு 50 கிராம் அளவிற்கு துருவிய வெல்லம் சேர்த்து அரைக்கவும். இது பீனட் பட்டருக்கு தேவையான சுவையை கொடுக்கும்.
- பல்ஸ் மோடில் வைத்து மிக்ஸ்யில் அரையுங்கள். அப்போது தான் மிக்ஸியும் சிறப்பாகச் செயல்படும்.
- இதன் பிறகு நிறத்திற்காக கொஞ்சம் கோகோ பவுடர் சேர்த்து இரண்டு சிட்டிகை உப்பு போட்டு ஸ்பூன் பயன்படுத்தி மிக்ஸ் செய்யவும்.
- பீனட் பட்டர் ரொம்பவும் இனிப்பாகவும் உப்பத் தன்மையாகவும் இருக்கக் கூடாது.
- அரைக்க அரைக்க கடலையில் இருந்து எண்ணெய் பிரிந்து பீனட் பட்டர் ஸ்மூத்தாக தொடங்கும்.
- இந்த நேரத்தில் முதலில் அரைத்து பொடிதாக்கிய வேர்க்கடலையை தற்போது அரைத்த வேர்க்கடலை ஸ்மூத்தியுடன் சேர்க்கவும்.
- ஒரு பாட்டில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கடைகளில் கிடைக்கும் பீனட் பட்டரை விட இது மிகவும் அருமையானதாக இருக்கும்.
- 15 முதல் 20 நிமிடங்களிலேயே இதை தயாரித்துவிடலாம்.
- இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. இதில் அதிகமான புரதம் உள்ளது. கொழுப்பும் குறைவு. எனவே பெரியவர்களும் இதை சாப்பிடலாம்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.