பெண்களுக்கு கூடுதல் அழகு சேர்ப்பது அவர்கள் கட்டும் புடவைகள் இன்றி வேறொன்றும் இல்லை. காட்டன், சிந்தடிக், சுங்கடி, லினன் காட்டன் என பெண்களுக்கென்று பல விதமான புடவைகள் இருந்தாலும் பட்டுப் புடவைகள் தான் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. முன்பெல்லாம் பட்டு புடவைகள் என்றாலே வெயிட் ஆக இருக்கும் என மனநிலை மாறிவிட்டது. இன்றைய பெண்களின் விருப்பம் மற்றும் நவீன காலத்திற்கு ஏற்றவாறு விதவிதமான பட்டுப் புடவைகள் வெயிட் இல்லாமல் கடைகளில் விற்பனையாகிறது.
பட்டுப் புடவைகள் டிசைன்கள் மற்றும் பட்டு நூல்களுக்கு ஏற்றவாறு ஆயிரத்திலிருந்து லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் விலை அதிகம் என்பதால் மற்ற புடவைகளைப் போல் இல்லாமல் கூடுதல் கவனம் செலுத்தி பெண்கள் பராமரிக்க வேண்டும். பட்டுப் புடவைகள் என்றாலே ட்ரை வாஷ் தான் செய்ய வேண்டும் என்பார்கள். அனைத்து இடங்களிலும் இந்த வசதி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இது போன்ற நிலையில் உள்ள பெண்களாக நீங்கள்? அப்ப உங்களது வீடுகளிலியே பட்டுப் புடவைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.
பட்டுப் புடவைகளைப் பராமரிக்கும் முறை:
மேலும் படிங்க : தமிழர்களின் பாரம்பரிய கொசுவ புடவைகள் கட்டும் முறை!.
- பண்டிகைகள் முதல் வீட்டு விசேசங்கள் என்றாலே பெண்களின் முதல் தேர்வு பட்டுப் புடவைகள். உங்களது அழகை மேலும் அழகாக்கும் இந்த புடவைகளைப் பராமரிப்பது என்பது சவாலான விஷயம் என்றால் கீழ்வரக்கூடிய சில டிப்ஸ்களை மறக்காமல் நீங்கள் பின்பற்றுங்கள்.
- பெண்கள் விசேசங்களுக்கு பட்டுப்புடவைகளை உடுத்தி செல்வீர்கள். வெளியில் உடுத்திவிட்டு வந்ததும் அதை அவிழ்த்து அப்படியே மடித்து வைக்கக்கூடாது. பட்டு நூலின் தரத்தைப் பாதிக்கும் என்பதால், வியர்வை நாற்றத்துடன் அப்படியே வைக்கக்கூடாது. சேலையை விரித்த வாக்கில் காற்றோடமாக வைத்திருக்க வேண்டும்.
- பட்டுப் புடவைகளை வீட்டில் அயர்ன் செய்து வைக்கக்கூடாது. அப்படி வைக்கும் போது மடிப்புகள் அதிகமாக மடங்கி கிழிந்து விடக்கூடும்.
- திருமண புடவைகள், நிச்சயதார்த்தம் போன்ற முக்கிய விசேச நாள்களில் எடுக்கும் கனமாக பட்டுப் புடவைகளை பண்டிகைக் காலங்களில் கட்டும் போது சங்கடமாக இருக்கும். வாழ்க்கையில் இனிய நினைவுகளுக்காக வைத்திருக்கும் இது போன்ற புடவைகளை அவ்வப்போது எடுத்துக் களைத்து விட்டு பின்னர் மடித்து வைக்க வேண்டும். அப்படியே வைத்திருக்கும் போது ஜரிகைகள் பிரியக்கூடும்.
- பட்டுப் புடவைகளை டிரை வாஷ் கொடுப்பது தான் நல்லது. ஒருவேளை உங்களால் முடியவில்லை என்றால் வீடுகளிலியே செய்ய முயற்சியுங்கள்.
- நீங்கள் தண்ணீரில் பூந்திக்கொட்டை (சோப்பு காய்) நனைத்து வைத்து புடவைகளை அலச வேண்டும். முழுவதுமாக புடவைகளை அப்படியே நனைத்து வைத்து அலச கூடாது. இவ்வாறு நீங்கள் செய்யும் போது முந்தியில் உள்ள சாயம் புடவை முழுவதும் ஒட்டிக்கொள்ளும். மாறாக முந்தானை மற்றும் உடும்பு பகுதிகளைத் தனித்தனியாக கயிற்றால் கட்டிக்கொண்டு முழ்க வைத்து எடுத்தால் போதும். எவ்வித சாயமும் இல்லாமல் பட்டுப் புடவைகளை ஈஸியாக பராமரித்துக் கொள்ள முடியும்
அப்புறம் என்ன? இனி நீங்களும் வீட்டு அலமாரிகளில் அடுக்கி வைத்துள்ள பட்டுப்புடவைகளை இது போன்ற முறைகளைப் பயன்படுத்தி புதிதாக வைத்துக் கொள்ளுங்கள்.