ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் பார்க்கப் போவது உலக நாடுகளில் மிகவும் பிரபலமான பானமாகும். இந்தியாவில் இதை கொம்புச்சா டீ என்று அழைக்கின்றனர். இதன் செய்முறைக்கு குறைந்தது இரண்டு மாத காலமாகும். ஏனென்றால் பிளாக் டீ கொம்புச்சா ஆக மாறுவதற்கு ஆறு வாரங்கள் ஆகும். இதை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் பருமனாக உள்ள நபர்களுக்கு இந்த புரோபயாட்டிக் பானம் பெரிதும் உதவும்.

கொம்புச்சா செய்யத் தேவையானவை

  • டீ தூள்
  • கிரீன் டீ தூள்
  • தண்ணீர்
  • கொம்புச்சா ஸ்கோபி
  • பைனாப்பிள் ஜூஸ்
  • வெல்லம்

கொம்புச்சா செய்முறை

  • பெரிய பாத்திரத்தில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் மூன்று ஸ்பூன் தேயிலை தூள் மற்றும் மூன்று ஸ்பூன் கிரீன் டீ தூள் சேர்க்கவும்
  • நன்கு கொதித்த பிறகு ஒரு கிலோ நாட்டு வெல்லம் சேர்த்து கிளறிவிட்டு அது கரைந்ததும் துணி போட்டு விடுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் தொந்தரவு செய்யாதீர்கள்.
  • தற்போது கண்ணாடி ஜாடியில் ஆன்லைனில் கிடைக்கும் கொம்புச்சா ஸ்கோபியை ஊற்றுங்கள். இது நொதித்தல் செயல்முறைக்கு மிகவும் முக்கியமானது. ஸ்கோபி என்பது வளரக்கூடிய பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றின் கலவையாகும்.
  • அடுத்ததாகக் கண்ணாடி ஜாடியை துணியால் மூடி அதில் டீ டிகாஷனை ஊற்றி வடிகட்டவும். இதன் மூலம் தேவையில்லாத தூள் அகற்றப்படும்.
  • கொம்புச்சா தயாரிப்பில் இரண்டு நொதித்தல் செயல்முறைகள் உள்ளன. முதல் நொதித்தல் செயல்முறை முடிவதற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும்.
  • இப்போது தூய்மையான காட்டன் துணியை வைத்து கண்ணாடி ஜாடியை மூடி விடுங்கள்.
  • மூன்று வாரங்கள் கழித்து ஜாடியை திறந்து பார்த்தால் ஸ்கோபி சப்பாத்தி போல நன்கு வளர்ந்திருக்கும்.
  • டீயுடன் சேர்க்கப்பட்ட சர்க்கரையை சாப்பிட்டு பாக்டீரியா வளர்ந்திருக்கும்.
  • இதையடுத்து ஒன்றரை லிட்டர் அளவிற்கு அன்னாசி பழ ஜூஸ் போட்டு வைத்திருங்கள்.
மேலும் படிங்க வீட்டிலேயே எளிதாக பீனட் பட்டர் தயாரிக்கலாம்
  • ஒரு லிட்டர் பாட்டிலில் பாதி அளவிற்கு கண்ணாடி ஜாடியில் ஸ்கோபியில் மூழ்கிய டீ டிகாஷனையும் பாதி அளவிற்கு அன்னாசி பழ ஜூஸையும் கலந்து வைக்கவும்.
  • இரண்டு வாரத்தில் இரண்டாவது நொதித்தல் செயல்முறை நடந்துவிடும்.
  • அதன் பிறகு தினமும் கொஞ்சம் 100 மில்லி அளவிற்கு கொம்புச்சா குடிக்கலாம்.
  • கொம்புச்சா தயாரான பிறகு அதை குளிர்பதன பெட்டியில் வைக்கவும்.
  • கொம்புச்சா குடிப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். கொம்புச்சாவில் உள்ள நல்ல பாக்டீரியா உணவில் இருக்கும் தேவையற்றதை நீக்கும்.
  • இது புளிப்பு தன்மை கொண்டதாக இருக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம், அதேநேரம் உடல் எடையைக் குறைக்கலாம்.
  • செரிமானத்திற்கு கொம்புச்சா மிகவும் பயனுள்ளதாகும்.

மேலும் படிங்ககுழந்தைகளுக்கு பிடித்தமான பன்னீர் கபாப் செய்முறை

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்