உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!

முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

Staff Writer
moringa uses

அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வைத்திருப்பதை பார்க்க முடியும். இன்றைய நவீன காலத்தில் மரம் வளர்ப்பது குறைந்து கடைகளில் முருங்கைக்கீரை வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இந்த முருங்கை மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை போன்ற அனைத்து பகுதிகளும் பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. 

கீரையின் அரசன் என்று கூறப்படும் இந்த முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்து நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம் இந்த கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், காப்பர், சோடியம், ஜிங்க் மெக்னீசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஃபைபர், புரதம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

முருங்கைக்கீரை மகிமையை உணர்ந்து தான் 'ஒரு எருதும் ஒரு முருங்கை மரமும் இருந்து விட்டால் போதும் எந்த வித வறட்சியையும் சமாளித்துவிடலாம்' என்று கிராமங்களில் கூறியிருக்கிறார்கள். இது போன்ற கீரைகளை வாரத்திற்கு மூன்று நாட்களாவது சமைத்து சாப்பிட்டு வந்தால் புரதக் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி பாதிப்பு போன்ற  பிரச்சனைகளை இல்லாமல் செய்துவிடும்.

மேலும் படிக்க: சளி-இருமலை குணபடுத்த வீட்டில் கிடைக்கும் மசாலாப் பொருட்கள்!

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதோடு உடல் பிரச்னைகளை நீக்கும் பணிகளையும் முருங்கை எனும் அற்புத கீரை செய்கிறது . இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து அதிகரிக்கும். முருங்கையை பொறுத்தவரை இதை வித விதமாக சமைக்கலாம். சில கீரைகளில் கடைசல் பொரியல் மட்டும் தான் வரும். ஆனால் முருங்கைக் கீரையில் மசியல், பிரட்டல், குழம்பு, சூப் என்று பல வெரைட்டி டிஷ் செய்து பிரமாதப்படுத்தலாம். இந்த சுவையும் புதிதாக இருக்கும் என்பதால் 'அய்யோ கீரையா' என்று குழந்தைகளும் ஓரங்கட்ட மாட்டார்கள்.

murunga keerai

உடல் வெப்பத்தை தணிக்கும் :

அகஸ்தியரின் குணபாடத்தில் முருங்கை கீரை மந்தத்தன்மையை போக்கி, உடல் சூட்டை குறைத்து, கண் நோயை தீர்த்து வைக்கும் குணங்களை கொண்டது என்று கூறப்படுகிறது . முருங்கைக் கீரையின் தன்மை குறித்து அறிவியல் கூறுவது என்னவென்றால், முருங்கை கீரை வெப்பத்தை உண்டாக்கும் தன்மை பெற்றிருப்பதால் சூட்டு உடம்புக்காரர்கள் மிளகு சேர்த்து பயன்படுத்தலாம். மிளகு சேர்ப்பதால் அவை உணவில் உள்ள சூடு மற்றும் குளிர்ச்சியை சமப்படுத்தி கொடுக்கும்.

கண் பார்வைக்கு நல்லது :

பொதுவாக, கண் பார்வை கூர்மை பெற கேரட் சாப்பிட வேண்டும். கால்சியம் சத்திற்கு பால் அருந்த வேண்டும். விட்டமின் சி சத்திற்கு ஆரஞ்சு, பொட்டாசியம் சத்திற்கு வாழைப்பழம் என்று சொல்வார்கள். ஆனால் இவற்றிலுள்ள சத்துகளின் அளவைவிட அதிகமாகவும் ஒட்டுமொத்தமாகவும் முருங்கை கீரையிலேயே உள்ளது. முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பிரச்சனைகள் எளிதில் குணமாகும். 

முருங்கை சூப்:

பகல் நேரத்தில் வீட்டில் டீ காபி குடிப்பதற்கு பதிலாக முருங்கைக் கீரையை நீர்விட்டு வேகவைத்து, அந்த நீரை சூப்பாக குடிக்கலாம். உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பித்தம், கண் கட்டி எல்லாம் இதை குடித்து வந்தால் குணமாகும். 

மருத்துவ குணங்கள்:

மூட்டுவலி, வாயுக் கோளாறு, கண் தொடர்பான நோய்களுக்கு மாத்திரை மருந்துகளே தேவையில்லை. மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக் கீரையை அவித்து தொடர்ந்து உண்டு வந்தால் எழுபது வயது ஆள் கூட எழுந்து மாரத்தானில் ஓடலாம். அதேபோல் வாயுக் கோளாறு இருப்பவர்கள் முருங்கைக் கீரையுடன் பூண்டு பல் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாயு பிரச்னை தீரும்.

மருத்துவ ஆராய்ச்சி:

இன்றும் முருங்கைக் கீரையை வைத்து எண்ணற்ற ஆராய்சிகள் நடைப்பெற்று வருகின்றன. முருங்கைக் கீரை மட்டுமில்லை, பல கீரை வகைகள் மூலிகைகள் பற்றிய தரவுகள் நம்மிடம் இருப்பதை காட்டிலும் வெளிநாட்டு மருந்து ஆராய்ச்சியாளர்களிடம் தான் இருக்கிறது. நம் ஊரிலும் அது போன்ற ஆராய்ச்சிகளை அரசு ஊக்குவித்து, உணவே மருந்து மருந்தே உணவு என்று போற்றும் நம் பாரம்பரிய கீரைகள், மூலிகைகள் பற்றிய அறிதல் அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க: தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த இலைகளை மென்று சாப்பிடுங்கள்!

ஆராய்ச்சி ஒன்று முருங்கை கீரையில் 46 ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் இருக்கின்றன என தெரிவிக்கிறது. ஆண்டி ஆக்ஸிடெண்ட்டின் பணி, உடலில் உள்ள செல் அழிவை குறைத்து இளமையோடு இருக்க உதவும். முருங்கைக் கீரை மட்டுமல்ல, முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. அதன் காய், இலை, பட்டை, வேர் என்று எல்லாம் மருத்துவத்திற்கு பயன்படுத்த உகந்தவை. 

 

Image source: google

 
Disclaimer