இந்துக்களின் புனித பண்டிகையான பசந்த பஞ்சமி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வசந்த பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி அல்லது சரஸ்வதி பூஜை என்றும் அழைக்கப்படும் இந்த நாள் வசந்த காலத்தின் முதல் நாளில் வருகிறது. இந்த விழா சரஸ்வதி தேவியை போற்றுகிறது. அறிவு, இசை, கலை, அறிவியல் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் தெய்வமான சரஸ்வதி தேவி இந்த நாளில் வணங்கப்படுகிறார்.
வசந்த பஞ்சமி அன்று தான் சரஸ்வதி தேவியின் திரு அவதாரம் உண்டானது. மாதம்தோறும் வளர்பிறை, தேய்பிறைக்கு பின்னரேபஞ்சமி வரும். இதில் தை அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய பஞ்சமி தான் வசந்த பஞ்சமியாகும். ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு பிறகு வரும் ஐந்தாம் நாளில் வசந்த பஞ்சமியாக கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து கலைகளுக்கும், கல்விக்கும் அதிதேவதையாக விளங்குகின்ற சரஸ்வதி தேவி அவதாரத்திற்கு பின்னால் சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.
வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை நாம் வணங்கினால் நிச்சயமாக நமக்கு ஞானம் பெருகும், பேச்சுத் திறமை நன்றாக இருக்கும். உங்கள் குழந்தை சரியாக பேசவில்லை, திக்குகிறது என்றால் இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வணங்குங்கள். பூஜை செய்த பிறகு நாள் முழுவதும் மனதிற்குள் சரஸ்வதி தேவி மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருங்கள். வட மாநிலங்களில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் வசந்த பஞ்சமியன்று வித்யாரம்பம் ஆரம்பமாகிறது.
இந்த நாளில் குழந்தைகளின் முன் கலை, கல்வி சார்ந்த பொருட்களை பெற்றோர் வைக்கின்றனர். அந்த குழந்தை தனது கையில் எடுக்கும் பொருளை வைத்து அது வருங்காலத்தில் எந்த துறையில் ஜொலிக்கும் என்பதை சொல்லிவிடலாம். வட மாநிலங்களில் இந்த புனித நாளில் அறிவு, கற்றல், இசை, கல்வி மற்றும்
கலைகளின் தெய்வமாக கருதப்படும் சரஸ்வதி தேவியை பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். இது சரஸ்வதி தேவியின் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பகிர்வதற்கான வாழ்த்து மற்றும் பூஜிப்பதற்கான மந்திரங்கள் இங்கே...
வசந்த பஞ்சமி வாழ்த்து
- வசந்த பஞ்சமியான இந்நாளில் கலைவாணியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
- வாழ்வில் வசந்தம் வீச சரஸ்வதியை வழிபடுவோம்! சரஸ்வதியின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்...
- பிரச்சினைகள் தீர்ந்திட! வாழ்வில் வசந்தம் வீசிட! சரஸ்வதியை இந்நாளில் வழிபட்டு அனைத்து வளங்களையும் பெற்று ஆனந்தமாக வாழ வாழ்த்துகள்...
சரஸ்வதி மந்திரங்கள்
ஓம் ஐங் சரஸ்வதியே நம!
ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி! வீணா புஸ்தகராணி வாணி! கமலபாணி வாக்தேவி வரநாயகி! புஸ்தகஸ்தே நமோஸ்துதே
ஸ்ரீ வித்யா ரூபிணி; சரஸ்வதி; சகலகலாவல்லி; சாரபிம் பாதிரி; சாரதா தேவி; சாஸ்திரவல்லி; வீணா புஸ்தக தாரிணி; வாணி; கமலபாணி; வாக்தேவி; வரதநாயகி; புஸ்தக ஹஸ்தே; நமோஸ்துதே
சரஸ்வதி மஹாபாகே வித்யே கமலலோசநே!
வித்யாரூபே விஷாலாஷி வித்யாம் தேஹி நமொஸ்துதே!