Pongal Wishes 2024 : நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப வேண்டிய பொங்கல் வாழ்த்து

இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவித்து இன்று தைப் பொங்கல் கொண்டாடப்பட்டுகிறது. இந்த திருநாளில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கு அனுப்ப வேண்டிய வாழ்த்து செய்திகள் இங்கே பகிரப்பட்டுள்ளன

Raja Balaji
Pongal Messages

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பிரதான பண்டிகை என பொங்கல் பண்டிகையை கூறலாம். இந்த முறை தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சூரியனை வழிபட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மாடு, உழவுப் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

Harvest Festival

மகிழ்ச்சிகரமான அந்த நாளில் உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்க இங்கே சில வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளோம். இவற்றை நீங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பலாம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

பொங்கல் வாழ்த்துகள்

1. மங்களம் பொங்கட்டும்… மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்… எண்ணியது ஈடேற… தமிழர் திருநாள்… தைப் பொங்கல் வாழ்த்துகள்…

2. அன்பும் ஆனந்தமும் பொங்கிட… அறமும் வளமும் தளைத்திட… இல்லமும் உள்ளமும் பொங்க…இனிய தமிழர் திருநாளாம்… பொங்கல் நல்வாழ்த்துகள்

3. உழவனுக்கு ஒரு திருநாளாம்.. உலகம் போற்றும் நன்னாளாம்... சூரியனை வணங்கி விட்டு... சுருக்குப் பையில் காசு எடுத்து தித்திருக்கும் கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம்… அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்

4. காசுக்கு கரும்பு வாங்கி... அதை கால் பாகமாக உடைத்து... கடவாய் பல்லில் கடித்து... தித்திப்போடு கொண்டாடுவோம்... இந்த பொங்கல் திருநாளை... இனிய பொங்கல் வாழ்த்துகள்

5. உறவுகளின் வீட்டில் புன்னகை பொங்க… இனம் புரியா இன்பம் மனதில் பொங்க… நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க… பொங்கட்டும் தைப் பொங்கல்

6. வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்… வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்… உடலில் பிணி நீங்கி ஆரோக்கியம் பொங்கட்டும்… அறியாமை நீங்கி அறிவு பொங்கட்டும்… இருள் நீங்கி ஒளி பொங்கட்டும்… அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கல் பொங்கட்டும்

7. அன்பு பெருக… மகிழ்ச்சி என்றும் தங்க… செல்வம் நிலைக்க… நோய் நீங்க… முயற்சி பெருக… வெற்றி என்றும் உங்கள் வசமாக… இனிய பொங்கல் வாழ்த்துகள்

8. கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும்… இனிய பொங்கல்  வாழ்த்துகள்

9. பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும், தலைகள் நிமிரும், நிலைகள் உயரும், நினைவுகள் நிஜமாகும், கதிரவன் விழிகள் நல்ல விடியலை கொடுக்கும், அவலங்கள் அகலும், இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்

10. தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் அனைவரது மனங்களும் இன்பம் பொங்க… இனிய பொங்கல் வாழ்த்துகள்

11. இல்லங்களைத் தூய்மைபடுத்தி, அரிசிமாவில் கோலம் போட்டு மாவிலை தோரணமிட்டு, புத்தாடை உடுத்தி காய்கறி, பழம், கரும்பு, இஞ்சி மஞ்சள் கொத்துடன் கதிரவனுக்கு நன்றி செலுத்துவோம்... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

12. தைத்திருநாளில் நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மறக்காமல் இந்த வாழ்த்து குறுஞ்செய்திகளை உழவு தொழில் செய்யும் நண்பர்களின் குடும்பங்களுக்கு அனுப்புங்கள்

Disclaimer