Mattu Pongal Wishes 2024 : உழவு தோழர்களுக்கு அனுப்ப வேண்டிய மாட்டுப் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை போல மாட்டுப் பொங்கலுக்கும் உழவு தோழர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கலாம். அதற்கான சில வாழ்த்து செய்திகள் இங்கே

Raja Balaji
mattu pongal messages

விவசாய தொழிலில் உழவனுக்கு ஏர் கலப்பை சுமக்கும் தோழனாகவும், ஜல்லிக்கட்டு களத்தில் சீறிப்பாயும் காளையாகவும், வாழ்க்கை முழுவதும் மனிதனுக்கு பால் கொடுக்கும் பசுவாகவும் மாடுகள் நமது வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றன. போர் தொடுக்கும் காலங்களில் கூட ஒரு நாட்டின் வளத்தை சுரண்ட அந்நாட்டில் உள்ள மாடுகளையே முதலில் வசப்படுத்துவார்கள் என வரலாறு உண்டு. இப்படி காலங்காலமாக மனிதனுக்கு உதவி வரும் மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலன்று பகிர வேண்டிய சில வாழ்த்து செய்திகள்

mattu pongal wishes

  1. உழைத்து களைத்த உழவர்களுக்கு ஒரு நாள்... உழவர் திருநாள்! உழைத்து களைத்த உனக்கு ஒரு நாள்... மாட்டுப் பொங்கல்! விவசாயிகள் அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்
  2. ஆறு மாதம் அன்னையின் முளைப்பால் அருந்தினோம்... ஆயுள் முழுவதும் உந்தன் மடிப்பால் அருந்தினோம்... எங்களின் இரண்டாம் தாயும் நீயே... குடும்பம் செழிக்க உதவும் கோமாதாவும் நீயே... உன்னை வணங்கவே உனக்கொரு பண்டிகை
  3. மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து... நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு... தோள்கொடுக்கும் எருதுகளை போற்றுவோம்... மாட்டு பொங்கல் வாழ்த்துகள்
  4. விவசாயத்தின் தோழனான் உழவனின் தொண்டனாய்... வீரத்தின் அடையாளமாய் விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவோம்... இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துகள்
  5. உழவனின் பிரியமான தோழனுக்கு இன்று பொங்கல்... பொங்கலோ பொங்கல்... மாட்டு பொங்கல் வாழ்த்துகள்
  6. இவ்வுலகில் தாய்ப்பால் அருந்தாமல் வளர்ந்தவர் பலர்... பசும் பால் அருந்தாமல் வளர்ந்தவர் இலர்... அனைத்து உறவுகளுக்கும் அன்பார்ந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்
  7. களைப்பறியாது உழைக்கும் உனக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன்... மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்
  8. மனிதனுக்கு பால் கொடுத்து... உழவனுக்கு தோள் கொடுத்து... மனித இனத்திற்கு தன்னையே கொடுத்து... மாண்டு போகும் மாட்டுக்கு நன்றி தெரிவிப்போம்... மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்
  9. விவசாயிகளையும் விளை நிலங்களையும்... செழிப்புடன் வைத்திருக்கும் தன் வருத்திக் கொண்டு... அன்றாடம் உழைக்கும் உயிரினித்திற்கு நன்றி செலுத்துவோம்... இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்

இதே போல மனிதர்களின் வாழ்க்கையில் மாடுகளின் முக்கியத்துவம் குறித்து பல பாடல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற வந்தேன் டா பால்காரன் பாடல் மாட்டுப் பொங்கல் கொண்டாடும் ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் கட்டாயம் ஒலிக்கும் அல்லது மாட்டு பொங்கல் ஸ்டேட்டஸ் வைப்போரின் வீடியோவில் கட்டாயம் இந்தப் பாடல் இருக்கும். அதில் இடம்பெற்ற சில வரிகள்

“புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்”

“தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா”

“சானம் விழுந்தா உரம் பாரு... எருவை எரிச்சா திருநீறு”

மாடு வைத்திருக்கும் உங்களின் அனைத்து தோழர்களுக்கும் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி மகிழுங்கள்.

Disclaimer