பிப்ரவரி மாதம் வந்தாலே காதலர்களுக்கு ஒரே குஷி தான். காதலர் தினமோ பிப்ரவரி 14 என்றாலும் ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டங்கள் இருக்கக்கூடும். ஒருவரிடம் காதலை சொல்வதற்கு முன்னதாக ரோஸ் கொடுத்து அவர்களைக் கவர்வது முதல் உங்களுக்காகத் தான் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்கு ப்ரோபோஸ் டே என காதலர் தினம் வரை கொண்டாட்டங்கள் களைக்கட்டும். உங்களது காதலை காதலுடன் பரிமாறிக்கொள்ள இந்த ப்ரோபோஸ் டே வில் திட்டம் இருந்தால்? அப்ப உங்களை அழகாக்கிக் கொள்ள வேண்டாமா?
ஆம் வேறொருவரை நேசிப்பதற்கு முன்னதாக, முதலில் நம்மை நேசிக்க வேண்டும் என்று மக்கள் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆம் உங்களை அழகாக காட்டுவதில் சருமத்திற்கு எப்போதும் முதலிடம் உண்டு. எனவே எப்போதும் உங்களது சரும ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது. அதுவும் காதலை வெளிப்படுத்த உதவும் ப்ரோபோஸ் டேவில் உங்களை அழகாக்கிக் கொள்ள வேண்டும். அதிக வேலைப்பளுவால் உங்களால் அழகுநிலையங்களுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், வீட்டிலேயே சில உங்களை அழகாக்கிக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். இதோ வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி வருகின்ற ப்ரோபோஸ் டேவில் உங்களது காதலரைக் கவர என்னென்ன பேசியல்களை வீட்டிலேயே மேற்கொள்ளலாம் என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
வீட்டிலேயே மேற்கொள்ளும் அழகுக்குறிப்புகள்:
- நீங்கள் பால், குங்குமப் பூ, முந்திரி, தண்ணீர் போன்றவற்றை முதலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் முந்திரியை தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு மீதமுள்ள பால், குங்குமப்பூ, தண்ணீர் போன்றவற்றை சேர்த்து பேஸ்ட் போன்று நன்கு கலந்துக்கொள்ளவும்.
மேலும் படிங்க: காதலிக்கு சிவப்பு ரோஜா கொடுப்பதன் ரகசியம்!
இதையடுத்து முகத்தில் இருந்து கழுத்து வரை தடவிக் கொள்ளவும். பின்னர் முகத்தில் லேசாக மசாஜ் செய்யவும். முகம் மற்றும் கழுத்தை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவிக் கொண்டு, காட்டன் துணியால் துடைத்தெடுத்தால் போதும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தை பளபளப்புடன் வைத்திருக்க உதவும். நீங்கள் உங்களது காதலனை சந்திப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த பேஸ் பேக் கொண்டு பேசியல் செய்துக் கொள்ளவும். இதோடு வழக்கமாக நீங்கள் உபயோகிக்கும் சன்ஸ்கிரின், பேஸ் க்ரீம் , பவுடர், காஜல், மஸ்காரா, போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும். அதுவும் உங்களது காதலனுக்கு என்ன பிடிக்குமோ? அதற்கேற்றார் போல் உங்களது சருமத்தை அழகுப்படுத்திக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிங்க: காதலர் தினத்தில் யாரும் பார்க்காத இடங்களுக்கு செல்லத் திட்டமா?
இதே போன்று நீங்கள் உங்களது வீடுகளில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி பேசியல் செய்துக் கொள்ளலாம். மேலும் உங்களால் அழகு நிலையங்களுக்குச் செல்வதற்கான நேரம் கிடைத்தால் உங்களது சருமத்திற்கு எது சிறந்ததோ? அதற்கேற்ப உங்களை அழகாக்கிக் கொண்டு உங்களது காதலனிடம் காதலைப் பரிமாறிக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.