Fight Club : சண்டைக் காட்சிகள் தெறிக்கும் உறியடி விஜயகுமாரின் ஃபைட் கிளப்

அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உறியடி விஜயகுமார் நடித்திருக்கும் ஃபைட் கிளப் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

Raja Balaji
directed by abbas rahmath

ஜாதியை வைத்து சமூகத்தில் நடக்கும் கொலைகளை தனது முதல் படத்திலேயே திரையில் காண்பிடித்தவர் இயக்குநர் விஜயகுமார். உறியடி என தலைப்பிடப்பட்டு 2016ல் வெளியான அந்தத் திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தின் நாயகனாகவும் விஜயகுமார் நடித்திருந்தார். உறியடி திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அழுத்தமான திரைக்கதையும் முக்கிய காரணம்.

இதையடுத்து ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மையமாகக் கொண்டு உறியடி 2 படத்தை இயக்கினார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து இருந்தது. இதன் பிறகு சூரரைப் போற்று திரைப்படத்திற்கு வசனங்கள் எழுதியிருந்தார்.

lokesh kanagaraj film productions

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவன தயாரிப்பில் புதுமுக இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத்-ன் ஃபைட் கிளப் படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீஸரை பார்த்த போதே அனைவருக்கும் இது சண்டை காட்சிகள் நிறைந்த திரைப்படம் எனத் தெரியவந்தது.

மேலும் படிங்க அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரவ்

யூடியூப்பில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபைட் கிளப் டீஸரை பார்த்திருந்தனர். சில தினங்களுக்கு முன் திரையுலக பிரபலங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் படத்தைப் பெரிதும் பாராட்டினர்.

இன்று ஃபைட் கிளப் திரைப்படம் இந்தியா முழுவதும் 527க்கும் மேற்பட்ட திரைகளிலும், வெளிநாடுகளில் 200க்கும் மேற்பட்ட திரைகளிலும் வெளியாகியுள்ளது. சென்னை திரையரங்குகளில் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சினிமா ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர். படத்திற்கு கோவிந்த் வசந்தாவின் இசை வலு சேர்க்கிறது.

A certificate for Fight Club

மேலும் படிங்க கைதி 2 - முக்கிய தகவலை பகிர்ந்த நடிகர் நரேன்

படத்தில் முழுமுழுக்க சண்டை காட்சிகள் நிறைந்திருந்தாலும் அது ரசிக்கும்படியாக உள்ளதென ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். படத்தில் உறியடி விஜயகுமார் வடசென்னை இளைஞனாக நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது. கதாநாயகனாக விஜயகுமார் மேலும் மெறுகேறி இருக்கிறார். 

படத்தின் விமர்சனம் வெகுவிரைவில் ஹெர் ஹிந்தகியில் வெளியாகும்

Disclaimer