இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகமெங்கும் ரசிகர் பட்டாளம் உண்டு என நாம் அனைவரும் அறிந்தே. ஏ.ஆர்.ரஹ்மான் பல மொழிகளில் இசையமைத்திருப்பதால் அவரை தமிழகத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது. அவர் எங்கு சென்றாலும் ஆயிரக்கணக்கான நபர்கள் பின் தொடர்வார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை மந்திரம் என்றும் குறிப்பிடலாம். ஏனென்றால் வாழ்க்கையின் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நமக்கு புத்துணர்சி கிடைக்கும்.
ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது பெற்றதையடுத்து உலகமெங்கும் உள்ள இசை ஆர்வலர்கள் அவரை கவனிக்க தொடங்கினர். ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகிற்கு வந்த போது இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கின.
இசைக்கு மொழி தேவையில்லை என்பதை ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். உலகின் எந்த இடுக்கிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினாலும் இந்திய மக்கள் மட்டுமின்றி பிற மொழி வெளிநாட்டவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதுண்டு.
சமீபத்தில் துபாய் சென்றிருந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரசிகை ஒருவரால் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தோ - பிரெஞ்ச் கலைஞரான செலினேடி மாதாஹரி ஏ.ஆர்.ரஹ்மான் சென்ற காரை திடீரென நிறுத்தியுள்ளார். அவர் புகைப்படம் எடுப்பதற்காகக் காரை நிறுத்தவில்லை. கித்தாரும் கையுமாக இருந்ததால் இந்த பெண்மணி நம்மை ஈர்க்க எதோ ஒன்று செய்யக் காத்திருக்கிறாள் என்று ஏ.ஆர்.ரஹ்மானுக்கு புரிந்துவிட்டது.
#ARRahman started recording it after knowing she is singing Vande Mataram 😍pic.twitter.com/REQXCPC5Nw
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) January 12, 2024
அப்போது செலினேடி மாதாஹரி பாடல் ஒன்றை பாட விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானும் காரின் கண்ணாடியைக் கீழே இறக்கி புன்னைகத்தபடியே பாடுங்கள் எனக் கூறுகிறார். செலினேடி மாதாஹரி பாடிய பாடல் ஏ.ஆர்.ரஹ்மானை அசர வைத்தது. அவர் கித்தார் வாசித்தபடியே வந்தே மாதரம் பாடலின் இந்தி பதிப்பான மா துஜே சலாம் பாடலைத் தவறின்றி பாடினார். அவர் பாடுவதை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ந்து போனார்.
செலினேடி மாதாஹரியின் தாய் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தவர். இவரது தந்தை பிரெஞ்ச் கீ போர்டு வாசிப்பாளர். இதனால் அவருக்கு இசையின் மீது இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்ட அவர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ரோல் மாடல் எனவும் இந்த ஜாம்பவானை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சிக்கூரியது எனவும் குறிப்பிட்டுள்ளார். தன்னை பாட அனுமதித்ததற்கு நன்றி என்றும் செலினேடி மாதாஹரி தெரிவித்துள்ளார். சுமார் 33 லட்சம் பேர் இந்த வீடியோவுக்கு லைக் போட்டு வாழ்த்து கூறியுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு விரைவில் உங்களுக்கு கிடைக்கும் எனவும் பலர் கமென்ட் செய்துள்ளனர்.
இது போன்ற சுவாரஸ்யமான கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்