Kothu Chapati Recipe: சுவையான கொத்து சப்பாத்தி ரெசிபி டிப்ஸ்!

இனி சப்பாத்தி காய்ந்துவிட்டது என்ற கவலை வேண்டாம். இனி குழந்தைகளைக்குப் பிடித்தவாறு கொத்து சப்பாத்தி செய்துக் கொடுங்கள்.

Jansi Malashree V
egg kothu chapati recipes

நம்மில் பலருக்கு ருசியான உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதை எப்படி செய்வது என்ற குழப்பமும், பல நேரங்களில் சோம்பறித்தனமும் ஏற்படும். இதனால் பல வாரவிடுமுறை நாட்களை ஹோட்டல்களில் தான் செலவழிப்போம். இட்லி, தோசை, ப்ரெட் ரைஸ், சிக்கன் ரைஸ் என விதவிதமான உணவுகள் இருந்தாலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கொத்து பரோட்டா தான் விருப்பமாக இருக்கும். இதனாலேயே பல நேரங்களில் நம்முடைய வீடுகளிலும் கொத்து புரோட்டாவை செய்துக் கொடுப்போம். ஆனால் என்ன? புரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அதிகமாக சாப்பிடக்கூடாது என கட்டளையும் அம்மாக்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். இனி இந்த கவலையில்லை. குழந்தைகளுக்கு கொத்து புரோட்டோ போன்று சப்பாத்தியிலும் கொத்து சப்பாத்தி செய்துக் கொடுக்கலாம் தெரியுமா? இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் இங்கே.

kothu chapathi

தேவையானப் பொருட்கள்:

  • சப்பாத்தி - 6
  • வெங்காயம் - 3
  • தக்காளி - 2
  • இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு
  • மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - தேவையான அளவு
  • உப்பு- சுவைக்கு ஏற்ப
  • எண்ணெய்- தேவையான அளவு

கொத்து சப்பாத்தி செய்முறை:

  • முதலில் எப்போதும் போல சப்பாத்தி மாவை பிசைந்து சப்பாத்தியை செய்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.  இஞ்சி பூண்டு விழுதை அரைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • இதன் பிறகு, சப்பாத்தியைப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும் பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்னர் அதனுடன் பொடியாக்கி வைத்துள்ள சப்பாத்தியை போட்டவுடன் குருமாவை ஊற்றி நன்கு கொத்து புரோட்டோ செய்வது போன்று நன்கு கொத்தி வேக வைக்க வேண்டும். இதனுடன் லேசாக தண்ணீர் தெளித்து சிறிது நேரம் வேக வைக்கவும். சப்பாத்தி பொன்னிறமாக வந்ததும் கொத்தமல்லி இலைகளைத் தூவி விட்டு இறக்கினால் போதும் சுவையான கொத்து சப்பாத்தி ரெடி. 
 
chapathi recipes
சைவ பிரியர்களாக இருந்தால் வெஜ் குருமாவை மட்டும் பயன்படுத்தி கொத்து புரோட்டா செய்யலாம். ஒருவேளை அசைவ பிரியர்களாக இருந்தால், சால்னா மற்றும் முட்டை சேர்த்து சுவையான கொத்து சப்பாத்தி செய்யவும். இனி சப்பாத்தி காய்ந்துவிட்டது என்ற கவலை வேண்டாம். இனி குழந்தைகளைக்குப் பிடித்தவாறு கொத்து சப்பாத்தி செய்துக் கொடுங்கள்.

 Image source- Google

Disclaimer