ஒரு சிறிய மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமான நடைமுறைகள் மூலம் உங்கள் நாளை ஆரோக்கியமானதாக மாற்றலாம். உங்களின் சிறந்த காலை வழக்கத்தில் சில கருவேப்பிலைகளை சேர்ப்பது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.
கருவேப்பிலை இல்லாத சமையலறையே நம்மால் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு நம் தினசரி உணவுகளில் கருவேப்பிலை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் கருவேப்பிலையில் பல ஆரோக்கிய நன்மைகள் கொட்டி கிடக்கின்றன. இந்த இலைகள் உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையையும் நறுமணத்தையும் சேர்க்கின்றன. இந்த எளிய இலைகள் உங்களுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
கருவேப்பிலை உங்கள் தோல்,முடி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை இலைகளை மென்று சாப்பிடலாம்.
மேலும் படிக்க: தினமும் பழைய சோறு சாப்பிட வேண்டியதற்கான காரணங்கள்
தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை மென்று சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும்
கருவேப்பிலை முடி உதிர்வை எதிர்த்து போராட உதவும். காலையில் ஒரு கிளாஸ் தண்ணீர் அதனுடன் சில நிமிடங்களுக்குப் பிறகு கருவேப்பிலை இலைகளை மென்று சாப்பிடலாம். இலைகளை சரியாக மென்று குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்கவும். கருவேப்பிலையில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மற்றும் நிக்கோடினிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. கருவேப்பிலையின் மேற்பூச்சு பயன்பாடு கூட முடி உதிர்வை எதிர்த்து போராட உதவும்.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
தினமும் காலை கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று உண்பது செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் சாப்பிடும் போது கருவேப்பிலை செரிமான நொதிகளை தூண்டுகிறது. மற்றும் குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை போக்கவும் பெரிதும் உதவும்.
குமட்டலை குணப்படுத்தும்
ஒரு சில தனிநபர்களுக்கு தூங்கி எழுந்து பல் துலக்கிய பின்பு காலை உணவை சாப்பிடும்போதெல்லாம் குமட்டல் ஏற்படும். தினமும் காலை கருவேப்பிலை மென்று உண்பதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உணர்வை எதிர்த்து இது போராட உதவும். மேலும் இது செரிமானத்தை ஆதிக்கிறது.
எடை இழப்பு
கருவேப்பிலையை மென்று சாப்பிடுவது சிறந்த செரிமானம், நச்சு நீக்கம், சிறந்த கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கும். உங்கள் உணவில் கருவேப்பிலையை சேர்ப்பது கண்பார்வை திறனை அதிகரிக்கும். மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும்.
மேலும் படிக்க: வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ஜூஸ்கள்
Image source: Google