Captain Miller FDFS Celebration : பொங்கல் ரிலீஸ்! திரையரங்குகளில் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஆறுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ள நிலையில் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன

Raja Balaji
Huge reception in theatres

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ், அருண் விஜய்யின் மிஷன் சாஃப்டர் 1, மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாண்டிச்சேரியில் முதல் காட்சி திரையிடப்படும் முன்பாகத் தனுஷின் தீவிர ரசிகைகள் திரையரங்கிற்கு வெளியே மேள தாளங்களுக்கு உற்சாக நடனமாடினர். 

தனுஷின் கட் அவுட்டிற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். 

கேப்டன் மில்லர் திரைப்படம் தனுஷின் ஒன் மேன் ஷோ என சினிமா விமர்சகர்கள் பதிவிட்டுள்ளனர். இடைவேளை மற்றும் இறுதி காட்சிகள் மிகவும் அற்புதமாக உள்ளதென குறிப்பிட்டுள்ளனர். அசுரன் படத்திற்கு கொடுத்த பின்னணி இசைக்கு சமமாக கேப்டன் மில்லர் படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்தார். இது தொடர்பாக டிவிட்டரில் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனின் பின்னணியில் வலி நிறைந்த கதை இருக்கும்… ஒவ்வொரு வேதனையான கதைக்கும் வெற்றிகரமான முடிவு உண்டு... வலியை ஏற்றுக்கொண்டால் வெற்றிக்கு தயாராகலாம் என உணர்ச்சிவரமாகப் பதிவிட்டுள்ளார்.

அயலான் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் பிரமாதமாக இருக்கிறது என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். குழந்தைகளுக்கு இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கும் என பலரும் தெரிவித்துள்ளனர். முதல் பாதியை பார்த்த சிலர் காமெடி நன்றாக இருக்கிறது எனவும் படத்தில் தொய்வு இல்லை எனவும் பதிவிட்டுள்ளனர். 

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மகேஷ் பாபுவின் அவரது ரசிகர்கள் மாஸான வரவேற்பு கொடுத்துள்ளனர். அமலாபுரம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு முன்பாக நூற்றுக்கணக்கான மகேஷ் பாபு ரசிகர்கள் ஒன்று கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் அவ்வழியே வந்த பேருந்தின் மீது ஏறி மகேஷ் பாபுவின் பெயரை முழக்கமிட்டனர். ரசிகர்களின் கூட்டத்தால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிருஷ்ணா மஹால் திரையரங்கில் மகேஷ் பாபுவின் என்ட்ரி காட்சிக்கு ரசிகர்கள் கலர் பேப்பர்களை வீசியும், விசில்களை பறக்க விட்டும் ஆரவாரம் செய்தனர். ஒரு திரையரங்கின் முன்பாக மகேஷ் பாபு ரசிகர்கள் கடா வெட்டி குண்டூர் காரம் படம் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டனர். 

திருப்பதியில் மகேஷ் பாபுவுக்கு பெரிய பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஆந்தராவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் குண்டூர் காரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் வரும் குத்து பாடல் ஒன்றுக்கு ரசிகர்களும் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர்.

திரையரங்குகளும் நிரம்பி வழிவதால் உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Disclaimer